world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு பிறகு  கப்பலை விடுவித்தது ஹவுதி

இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான கேலக்சி லீடர்  கப்பல் குழுவினரை ஏமனின் ஹவுதி அமைப்பு ஒரு வருடத்திற்கு பிறகு விடுவித்துள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 பேர், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர், பல்கேரியாவைச் சேர்ந்த 2 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 2 பேர், ருமேனியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 25 நபர்கள்  உள்ளடக்கிய கப்பல் குழுவினர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஹவுதி அமைப்பை அமெரிக்கா மீண்டும் தீவிரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது.   

அமெரிக்க ராணுவ உதவியை   தேடும் ஜெலன்ஸ்கி 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அந் நாட்டில்  உள்ள  அமைதி காக்கும் படை யில்  அமெரிக்க வீரர்களை இணைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது தான் ரஷ்யா ராணு வத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியும் என வும் பேசியுள்ளார். உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்ற போது இதனை அவர் தெரி வித்துள்ளார். மேலும் அமெரிக்க ராணுவத்தின் உதவி இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே  சுயமாக  போதுமான ராணுவ ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி விட  முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவுடன்  இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் 

காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை இனப் படுகொலை செய்வதற்கு இஸ்ரேல் ராணுவம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகின்றது என பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பெரும்பா லான இலக்குகளை செயற்கை நுண்ணறிவு தொ ழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிவைத்து துல்லிய மான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்றது என பத்திரிகையாளர் தெரிவித்தார். போர் துவங்கிய போது கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்கான உதவிகளை வழங்கி வந்தது.

துருக்கி தீ விபத்தில்  பலி அதிகரிப்பு 

துருக்கி நாட்டில் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பேரழிவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக ரிசார்ட் அமைந்துள்ள போலு நகராட்சியின் தீயணைப்புத் துறைக்குப் பொறுப்பு அதிகாரியாக உள்ள  துணை மேயர், தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி, ஸ்கை ரிசார்ட் உரிமையாளர், மேலாளர்  உள்ளிட்ட  11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என துருக்கி  சட்டத்துறை அமைச்சர் இல்மாஸ் துன்க் தெரிவித்துள்ளார்.

மேற்கு கரையில் 12 பாலஸ்தீனர்களை  படுகொலை செய்த இஸ்ரேல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 12 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ‘இரும்புச் சுவர்’ என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தேடுதல் வேட்டையின் பெயரில் மேற்கு கரையில்  தொடர் படுகொலைகளை இஸ்ரேல் ராணுவம் செய்து வருகின்றது. காசா பகுதியில் போரை நிறுத்தினாலும் மேற்கு கரையில் தனது இனப்படுகொலைகளை இஸ்ரேல் தொடர்வதை ஏற்க முடியாது என கண்டனங்கள் எழுந்து வருகின்றன.