world

img

18 ஆயிரம் இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா; டிரம்பிடம் முழுமையாக சரணடைந்த மோடி அரசு

வாஷிங்டன், ஜன. 23 -  போதிய ஆவணங்கள் இன்றி  அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 18 ஆயிரம் நபர்களை நாடு கடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பிற்கு இப்போது வரை சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் மோடி அரசு முற்றிலும் அடிபணிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது பேசிய டிரம்ப், தான்  ஆட்சிக்கு வந்தால், அமெரிக்காவில் குடியேறியிருக்கும் வெளிநாட்டி னரை துரத்தியடிப்பேன் என்று வாக்கு றுதி கொடுத்திருந்தார். தற்போது தேர்தலில் வென்று ஜனாதிபதியாக வும் பதவியேற்றுள்ளார். ஆனால், டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக 2024 டிசம்பரிலேயே சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது எனவும்  முதற்கட்ட மாக சுமார் 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் வெளியேற்றும் எனவும் கூறப்பட்டது.  தற்போது அந்த வேலையை டிரம்ப்  நிர்வாகம் துவங்கி விட்டது. சட்ட விரோத குடியேறிகள் என வகைப் படுத்தி முதற்கட்டமாக சுமார் 18,000 இந்தியர்களை அமெரிக்காவை விட்டு துரத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த உத்தரவுக்கு இந்திய அரசாங்கம் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல், மாறாக, நாங்களே அவர்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்; அதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் ஒத்து ழைக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.  அமெரிக்காவும் நாடுகடத்தும் நடவடிக்கையும்  2023-24-இல் அமெரிக்க உள் நாட்டுப் பாதுகாப்புத்துறை (DHS) 1,100க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்தியது. மேலும் இதே காலத்தில் இந்தியர்கள் உட்பட சுமார்  1 லட்சத்து 60 ஆயிரம் பேரை 145 நாடு களுக்கு 495 விமானங்கள் மூலம் நாடு கடத்தியது. 2022 முதல் நடத்தப்பட்ட கணக் கெடுப்பில் ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பட்டியலில் பிலிப்பைன்ஸ் நாட்டை இந்தியா முந்தியுள்ளது. 2023-24 இல் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 90  ஆயிரத்து 415 இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர் அல்லது தடுத்து நிறுத்தியுள்ளனர். 2022 ஆண்டின் நில வரப்படி அமெரிக்காவில் அங்கீகரிக் கப்படாத அல்லது போதிய ஆவணங் கள் இன்றி 2 லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் குடியேறி  இருப்பதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்கா முழு வதும் போதிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள மொத்த மக்கள் தொகை 13.3 மில்லியன் ஆகும். தற்போது ஆவணமற்ற குடியேறி யவர்கள் என கூறப்படுபவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மானோர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருபவர்கள். இவர்களில் 5 சதவிகிதம் பேர்,  அந்நாட்டு விவசாயத்திற்கு பங்களிக் கின்றனர். சுகாதாரப் பராமரிப்பு, ஹோட் டல், கட்டுமானத் துறைகளில் சுமார் 12  சதவிகிதம் பேர் பணிபுரிகின்றனர்.