பெய்ஜிங்:
சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் 1ஆம்நாள் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமோலி ரஹ்மோன் மற்றும் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரூசெஜ் தூதா ஆகியோரைத் தனித்தனியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினார்.ரஹ்மோனுடனான உரையாடலின் போது ஜிஜின்பிங் கூறுகையில், இவ்வாண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்ட 20ஆவதுஆண்டு நிறைவாகும். நடப்புதலைமை பதவி வகிக்கும் நாடான தஜிகிஸ்தானின் பணிகளுக்கு சீனா ஆதரவு அளித்து, அதனுடன் இணைந்து,ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய வளர்ச்சியை தூண்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.போலந்து ஜனாதிபதி தூதாவுடனான உரையாடலின் போது சீனாவும்போலந்தும் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு ஒத்துழைப்பும் சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவும் மேலதிக சாதனைகளைப் பெறுவதைத் தூண்ட வேண்டும் என்று இருநாட்டுத் தலைவர்களும் ஒருமனதாக விருப்பம் தெரிவித்தனர்.