ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சமூக ஊடங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இன்று அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்கள் பொதுவாக கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் தொழிலை மேம்படுத்துதல் போன்றவற்றிற்குப் பயன்படுவதுபோலவே சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் மத்தியில் மனவளர்ச்சி குன்றுதல், கவனச்சிதறல், கண் பாதிப்பு போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என பலரும் கவலை தெரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் தடையை மீறி சிறுவர்கள் கணக்கு தொடங்க அனுமதித்தால் ரூ.296 கோடி அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
