world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்கா-ரஷ்யா  பேச்சுவார்த்தை தீவிரம் 

அமெரிக்கா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துகின்றன. ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே அனைத்து மட்டங்களிலும் தொடர்புகளை பராமரிப்பது, பேச்சுவார்த்தையில் புதிய நிபந்தனைகளை முன்வைப்பது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

புலம் பெயர் தொழிலாளர்களை  படுகொலை செய்த அமெரிக்கா 

ஏமன் மீது தொடர்ந்து குண்டு வீசும் அமெ ரிக்கா திங்களன்று குண்டு வீசி அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்களை படுகொலை செய்துள்ளது. ஆப்பிரிக்காவின் சஹாரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் ஆப்பிரிக்கர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா குண்டு வீசி யதில் 68 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி யானதாகவும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதா கவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 

இஸ்ரேல் குண்டு வீச்சில்  உடல் கருகிய குழந்தைகள் 

இஸ்ரேல் தாக்குதலால் உடல் கருகி படுகா யம் அடைந்தவர்களில் 70 சதவீதமான நபர்கள் குழந்தைகள் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு  தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்தும் குண்டு வீச்சில் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பயன்படுத்தி நடத்தும் தொடர் குண்டுவீச்சின் தாக்குதலால்  பெண்கள் குழந்தைகள் என பலரும்  உடல் கருகி  தீக்காயங்களுக்கு உள்ளாகின்றனர். அதில்  பெரும்பாலானவர்களுக்கு சுமார் 40 சதவீதத்துக்கு மேல் உடல் கருகி உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் வெடிவிபத்து பலி எண்ணிக்கை உயர்வு 

ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. ராக்கெட் ஏவுகணைகளில் உந்தித்தள்ளும் எரி பொருளாகப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருந்த கண்டெய்னரில்  ஏற்பட்ட வெடி விபத்தால் இத்தகைய மோசமான விபத்து அரங்கேறி யுள்ளதாக கூறப்படுகின்றது. விபத்தில் சுமார் 800 க்கும் அதிகமான நபர்கள் படுகாய மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

போப் கல்லறை  பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி 

போப் பிரான்சிஸ் உடல் புதைக்கப்பட்ட இரண்டாம் நாள் முதல் அவரது கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. போப் விருப் பத்தின்படி அவரது உடல் வாடிகனுக்கு வெளியே ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை ஒன்றில் அடக் கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இத் தாலி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் அவரது கல்லறையை காண ரோமுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடார் தேர்தலில் அமெரிக்க சதி : வெனிசுலா குற்றச்சாட்டு

கராகஸ், ஏப்.26- உலக அரசியல் வரலாற் றில் மிகப்பெரிய ஊழல் மோசடி களில் ஒன்றாக ஈக்வடார் ஜனாதி பதி தேர்தல் அமைந்ததாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் இவ்வளவு பெரிய அளவிலான ஆட்சிக் கவிழ்ப்பு  சாத்தியமானது என்றும் வெனி சுலாவின் ஐக்கிய சோசலிசக் கட்சி யின் செயலாளரும் உள்துறை அமைச்சருமான டியோஸ்டாடோ கபெல்லோ கூறினார். ஏப்ரல் 13 அன்று நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப் பில், தற்போதைய குடியரசுத் தலைவர் டேனியல் நோபோவா, குடியுரிமை புரட்சி (சிட்டிசன் ரெவ லுயுசன்) வேட்பாளர் லூயிசா கோன்சலஸை 11 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்தார். கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலு க்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கள் லூயிசா வெற்றி பெறுவார் என  கணித்தன. ஆனாலும் நோபோவாவின் நம்பமுடியாத வெற்றி சந்தே கங்களை எழுப்பியது. போதைப் பொருள் மாபியா கும்பல்களின் மையமாக மாறியுள்ள ஈக்வடா ரில், அவற்றைத் தடுப்பது என்ற பெயரில், அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை நிறுவ அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த நோபோவா தயாராகி வருகிறார்.

கனடாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

ஓட்டாவ,ஏப். 28-   கனடாவில் திங்களன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணி க்கு வாக்குப்பதிவு துவங்கியது. இந்த வாக்குப்பதிவு இரவு 9 மணிவரை தொடரும் எனவும் 10 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடையும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதமரும் தாரா ளவாத கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ மீதான நம்பிக்கை யின்மை, உள்கட்சியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவர் ராஜி னாமா செய்தார்.  இதனைத் தொ டர்ந்து அக்கட்சியின் தலைவராக மார்க் கார்னி தேர்வானார். கனடாவை ஆக்கிரமிக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பொருட்கள் மீது வரிகளை அதி கரிப்பது எனவும், அமெரிக்காவின் நெருக்கடி அதிகமாக உள்ள சூழலில் இது மிக முக்கியமான தேர்தலாக உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ஆரம்ப கட்ட முடிவுகளின் அறிவிப்பு வெளியா கும். எனினும் அதிகாரப்பூர்வ முடிவு கள் சில நாட்களுக்குள் உறுதிசெய் யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.