உடன்படிக்கைக்கு தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவிப்பு
காசா போரை முடிவுக்குக் கொண்டுவரு வதற்கான உடன்படிக்கைக்கு தயா ராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள் ளது. தங்களிடம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிப்பது, ஐந்தாண்டுக ளுக்குப் போர் நிறுத்தம் உள்ளிட்ட நிபந்தனை கள் வைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு தயாராக இருந்தாலும் இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது. மேலும் ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தத்தை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு
போப் பிரான்சிஸ் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக் ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் சந்தித்துள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. டிரம்பிற்கு உக்ரைன் ஜனா திபதி மீதான அதிருப்தியே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் சந்தித் ததாக உக்ரைன் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வரிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளுடனும் ஒற்றுமை
வரிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளுட னும் ஒற்றுமையை நாடுவதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாடு சர்வதேசச் சட்டங்களின் பக்கம் நிற்கிறது அமெரிக்கா முன் வைக்கக்கூடிய பாதுகாப்பு வாதத்தை சீனா எதிர்க்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் அதிக அகங்காரம் கொண்டுள்ள சில நாடுகளின் கொடு மைப்படுத்தும் நடவடிக்கையை அம்பலப்படுத் துவதாகவும் சீன வெளியுறவுத்துறை அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு விசுவாசம் காட்டும் உலக வங்கி
வளரும் நாடுகள் அமெரிக்காவுடன் விரை வான வர்த்தக ஒப்பந்தங்களை “கூடிய விரைவில்” செய்ய வேண்டும் என உலக வங்கி யின் தலைவர் தனது அமெரிக்க விசுவாசத்தை காட்டியுள்ளார். வளரும் நாடுகளுக்கு கடன் கொடுப்பதுடன் அந்நாடுகளை அமெரிக்காவின் சுரண்டலுக்குள் தள்ளும் வேலையையும் உலக வங்கி பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந் நிலையில் வர்த்தகத் தடைகளை குறைத்து, பிராந் தியப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க அமெ ரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என பேசியுள்ளார்.
ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 400 க்கும் மேற்பட் டோர்படுகாயமடைந்துள்ளனர். கண்டெய்னரில் இருந்த பொருட்கள் வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு இதில் தொடர்பு இருக்குமா என சந்தேகம் எழுப்பப்படுகிறது எனி னும் முழுமையான தகவல்கள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எனவும் வெளியாகவில்லை.