அமெரிக்கா - ரஷ்யா இடையே மியாமியில் பேச்சுவார்த்தை
உக்ரைன் -ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த வாரம் ஜெர்மனியில், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாட்டின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் மியாமியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு கடன் தர ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசனை
உக்ரைனின் ராணுவ மற்றும் பொரு ளாதாரத் தேவைகளுக்காக ஒரு மிகப்பெரிய அளவில் கடன் கொடுப்பது குறித்து விவாதிக்க, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கள் பெல்ஜியத்தில் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளார்கள். உக்ரைனுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுமார் 160 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இந்நிலையில் முடக் கப்பட்ட ரஷ்யா சொத்துக்களை ஐரோப்பிய நாடுகள் இதற்கு பயன்படுத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
தைவானுக்கு ஆயுத விற்பனை : அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை
தைவானுக்கு சுமார் 11 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே தைவானுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாகும். இந்த நட வடிக்கை ‘ஒரே சீனா’ என்ற கொள்கையையும், இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக் கைகளையும் மீறும் செயல் எனவும் இந்த ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விமானங்கள் மீதான தடை : நீட்டித்தது பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் வான்வழிப் பாதையை இந்திய விமா னங்கள் பயன்படுத்துவதற்கு அந்நாடு தடை விதித்தது. இதேபோல் இந்திய வானில் பறப்பதற்கு பாகிஸ்தானின் விமானங்களுக்கும் தடை விதிக் கப்பட்டது. பாகிஸ்தானின் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையா னது வரும் டிச.24 ஆம் தேதி காலாவதியாகின்றது. இதையடுத்து இந்திய விமானங்களுக்கு விதிக்கப் பட்ட தடையானது வரும் 2026 ஜன.23 வரையில் நீட்டிக்கப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள் மீது தாக்குதல் : சூடானில் 1600 பேர் படுகொலை
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2025 இல் மட்டும் சுமார் 1,600 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார நிலையங்கள் மீது நடத்தப்பட்டதாக 65 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் எல்-பாஷர் நகரில் மருத்துவமனை மீது துணை ராணுவப்படை தாக்குதல் நடத்தி 460 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை யே அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
