வாழ்வாதாரத்திற்காக நாடு கடந்த 80,000 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை (டிச. 18) முன்னிட்டு ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2014 ஆம் ஆண்டு முதல் வாழ்வாதாரத்திற்காக நிலம் மற்றும் கடல் வழியாக வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்களில் சுமார் 80,000 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என தெரிவித்துள்ளார். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவரே கூறியுள்ளார்.
பாதுகாப்பற்ற சூழல் : நைஜீரியாவில் போராட்டம்
நைஜீரியாவில் அதிகரித்து வரும் கடத்தல்கள், கொலைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்கு எதிராக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ‘நைஜீரியா தொழிலாளர் காங்கிரஸ்’ தலைமை யில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் அபுஜா வணிகத் தலைநகரான லாகோஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இத்தகைய வன்முறைகள் தங்க ளது உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து - கம்போடியா மோதல் விவாதிக்க சிறப்புக்கூட்டம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடு களுக்கு இடையே கடந்த வாரம் மீண்டும் மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கைத் தணிக்க அமெரிக்காவும் சீனாவும் தனித்தனியாக முயற்சி செய்து வருகின்றன. இந்த மோதல் குறித்து விவாதிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு டிசம்பர் 22 மலேசியாவில் சிறப்புக் கூட்டம் நடத்த உள்ளன.
உக்ரைனுக்கு 8 லட்சம் கோடி கடன் கொடுக்கும் ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது பட்ஜெட்டி லிருந்து உக்ரைனுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து கடன் கொடுக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பெல்ஜியத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒருமித்தகருத்து வராத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய சொத்துக்களை ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்காவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
44,000 பாலஸ்தீனர்களை வெளியேற்றிய இஸ்ரேல்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு ‘இன அழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து இஸ்ரேலின் முன்னணி பத்திரிகையான ‘ஹாரெட்ஸ்’ அறிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் 2024 ஜனவரி மாதம் ஆபரேஷன் அயர்ன் வால் என்ற பெயரில் மேற்குக் கரையில் தொடங்கப்பட்ட ராணுவ நடவ டிக்கையின் பின்னணியில் இதுவரை 44,000- க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அவர்களது வீடு களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற் றப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.