world

img

நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக முடியாது - ட்ரம்ப்

NATO-வில் உக்ரைன் உறுப்பினராக முடியாது எனவும், ரஷ்யா கைப்பற்றியுள்ள க்ரிமியா பகுதியை உக்ரைன் உரிமை கோரக் கூடாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக முடிக்க முடியும். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா ஆட்சியில் ரஷ்யா கைப்பற்றிய க்ரிமியா பகுதியை மீண்டும் பெறும் வாய்ப்பு இல்லை. உக்ரைன், NATOவில் சேர அனுமதி வழங்கப்பட மாட்டாது. சில விஷயங்கள் எப்போதும் மாறாது,” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புதினை ட்ரம்ப் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.