world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைன் - அமெரிக்கா - ரஷ்யா  பிப்.1இல் அடுத்தகட்ட பேச்சு

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் அடங்கிய அடுத்த முத்தரப்பு சந்திப்பு பிப்ரவரி 1 அன்று நடைபெறக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் தங்களது முதல் முத்தரப்புச் சந்திப்பை ஜனவரி 23 மற்றும் 24 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தினர். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரைனும் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அது குறித்து தீவிரமான விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தென் சீனக் கடல் விவகாரம்:  குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா

தென் சீனக் கடலில் சீனா பரந்த மற்றும் சட்ட விரோதமான கடல்சார் உரிமைகளைக் கோருகிறது என்று அமெரிக்கா கூறியது. இந்நிலையில் இது முற்றிலும் தவறான கருத்து என  சீனா மறுத்துள்ளது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங் பேசிய போது, சீனா வுக்கான நிலப்பரப்பு இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமைகள் உறுதியான வரலாற்று மற்றும் சட்டப்பூர்வ அடிப்படையைக் கொண்டவை. தென் சீனக் கடல் தீவுகள்  மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மீது சீனாவிற்கு மறுக்க முடியாத இறை யாண்மை உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தென்கொரியப் பொருட்களுக்கு  வரி உயர்வு - டிரம்ப் 

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாததால்  தென்கொரியாவின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்து வதாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்  அறிவித்துள் ளார். தனது சமூக ஊடகப் பதிவில், தென்கொரியா விலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், மரம் மற்றும் மருந்துகள் மீதான வரிகள் உயர்த்தப்படும் என்றும், மற்ற பொருட்களுக்கான வரி விகிதம் 15லிருந்து 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரிய நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒப்பந்தம் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர்  சீனாவிற்கு பயணம் 

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், 3 நாள்கள்  அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள் ளார். சீன ஜனாதிபதி ஜி  ஜின்பிங், பிரதமர் லி கியாங் ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளார். சர்வதேச அரசியலில் அமெரிக்காவுக்கும் ஐரோ ப்பிய நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடு கள் பொருளாதார நெருக்கடிகள் என்ற  கொந்த ளிப்பான சூழலில் ஸ்டார்மரின் சீனப் பயணம் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தங்களது உறவைச் சீரமைக்க இருநாடுகளும் முயன்று வரும் நிலையில் இப்பயணம்ஒரு முக்கி யத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

அமெ.ராணுவ மிரட்டல் குறித்து ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை 

மேற்காசியப் பிராந்தியத்தைச் சீர்குலைப்ப தற்காகவே அமெரிக்கா திட்டமிட்டு ராணுவ நடவடிக்கைகளையும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது என  ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் அவர் தொலை பேசி வழியாக உரையாடிய போது இதனைத் தெரி வித்தார். அமெரிக்கர்களின் மிரட்டல்களும் உளவியல் ரீதியான நடவடிக்கைகளும் இந்தப் பிராந்தியத்தின் பாது காப்பைச் சீர்குலைப்பதையே நோக்கமாகக் கொண்டுள் ளன. இது நிலையற்ற தன்மையைத் தவிர வேறு எதை யும் தராது என்றும் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.

மேற்காசியாவில் அமெரிக்கா ராணுவப் பயிற்சி

டெஹ்ரான்,ஜன.28-  மேற்காசியாவில் அமெரிக்கா  ராணுவப் பயிற்சி நடத்த உள்ளது. இது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை உரு வாக்கியுள்ளது.  அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான  மோதல் போக்கு அதிக ரித்து வருகிறது. இதன் பின்னணியில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது கடற் படையை நகர்த்தியுள்ளது. இச்சூழலில்  மேற்காசியாவில் பல நாட்கள் நீடிக்கக் கூடிய பிரம்மாண்டமான விமானப் படைப் பயிற்சியை நடத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ (Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பல்  மேற்காசியா சென்றடைந்ததாக அறிவிக்கப்பட்ட மறுநாளே இந்தப் பயிற்சி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  மேற்காசியா முழுவதும் போர் விமா னப் பலத்தை “நிலைநிறுத்துவது, பரவலாக்குவது மற்றும் நிலைநிறுத்திப் பராமரிப்பது” போன்ற திறன்களை இந்தப் பயிற்சி வெளிப்படுத்தும் என்று அமெ ரிக்க மத்திய கட்டளைத் தளத்தின் (CENTCOM) விமானப் படைப் பிரிவு தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பயிற்சி நடைபெறும் தேதி அல்லது துல்லியமான இடம்  குறித்த விவரங்கள் வெளியிடப்பட வில்லை.

அமெரிக்கா மீதான விமர்சனம்   கருத்தை திரும்பப் பெற கனடா பிரதமர் மறுப்பு

ஒட்டாவா,ஜன.28- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் தான் பேசியதா கக் குறிப்பிட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, கடந்த வாரம் அமெரிக்காவை விமர்சித்து தான் கூறிய கருத்துக ளைத் திரும்பப் பெறவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற  உலகப் பொருளாதார மன்றத்தின்  கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, “விதிமுறைகளின் அடிப்படையிலான உலகளா விய ஒழுங்கு முடிவுக்கு வருவதை நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்தக் கருத்து டிரம்ப்பை எரிச்சலடையச் செய்தது.  இந்தச் சூழலில் ஜன.26 அன்று டிரம்ப்புடன் கார்னி  தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்படி பேசிய போது கார்னி தனது கருத்துகளிலிருந்து “மிகத் தீவிரமாகப் பின்வாங்கினார்” என அமெரிக்க நிதிய மைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க் கார்னி, “மிகத் தெளிவாகக் கூறுகிறேன், இதையே டிரம்ப்பிடமும் சொன்னேன் — டாவோஸில் நான் பேசியது எதிலும் மாற்றமில்லை” என ஸ்காட் பெசென்ட் டின் கருத்தை மறுத்துள்ளார்.