business

img

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஒரே நாளில் கடும் உயர்வை சந்தித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. 
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனையாகிறது. இதனால் சவரன் தங்கம் ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.425-க்கும், கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து ரூ.4,25,000-க்கும் விற்பனையாகி வருகிறது.