மாணவர்களை ஏமாற்றும் விபிஎம் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள VPM கலைக்கல்லூரி மகளிர் கல்லூரியாக செயல்பட்டு வந்த நிலையில், இருபாலர் கல்லூரி ஆக மாற்றம் செய்யப்பட்டது.
அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் மாணவர்களையும் கல்லூரியில் சேர்த்து அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் நிலையில் தற்போது வரை சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று இந்திய மாணவர் சங்கத் தலைமையில் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
