இனப்படுகொலை குற்றவாளி நேதன்யாகு: கைது ஆணை பிறப்பித்த துருக்கி
துருக்கி அரசு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காசா மீதான போரில் நேதன்யாகு, இஸ்ரேல் அமைச்சர் மற்றும் சில மூத்த அதிகாரிகள் ‘இனப்படுகொலை’ குற்றம் செய்துள்ளனர் எனவும் அவர்கள் எகிப்திற்குள் வந்தால் கைது செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. எகிப்தில் ஜனாதிபதி எர்டோகன் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் அதிருப்தியை மடைமாற்ற இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் விவேக் ராமசாமி
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். 2026 மே மாதம் நடைபெற உள்ள ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் இவர் போட்டியிடுகிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் எலான் மஸ்க்கிற்காக தான் உருவாக்கிய அரசு செயல்திறன் துறையில் தனது ஆதரவாளராக செயல்படும் ராமசாமியைத் துணைத் தலைவராக டிரம்ப் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டு 2025 - ஐ.நா.
2025 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாகப் பதிவாகும் நிலையில் உள்ளது என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நிலவி வரும் அதிக வெப்பத்தால் இந்த ஆண்டு வரலாற்றில் இரண்டாவது அல்லது மூன்றாவது மிக வெப்பமான ஆண்டாக இடம் பிடிக்கும் என ஐ.நா. உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு அதிகரித்துள்ள நிலையில் அது புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதை நடைமுறையில் சாத்தியமற்றதாக்கி வருகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் துவங்கியுள்ளது. இது லெபனான் எல்லை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு மீண்டும் அகதிகளாகச் செல்ல வழிவகுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தியதுடன் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற உத்தரவிட்டதாகவும் அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் புயல் : 204 பேர் பலி
பிலிப்பைன்ஸில் வீசிய கல்மேகி புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் 127 பேர் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் இவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்படுவது கடினம் என்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலால் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
