world

img

இந்தியாவுக்கு 50% வரி விதித்து டிரம்ப் மீண்டும் மிரட்டல்

இந்தியப் பொருட்கள் மீது 50 சதவிகிதம் வரி விதித்து டிரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.

இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7-ஆம் முதல்  அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.