world

நான் தோற்றால் அதற்கு காரணம் அமெரிக்க யூதர்கள் தான் தேர்தலுக்கு முன்பாகவே டிரம்ப் புலம்பல்

வாஷிங்டன், செப்.20-  குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாள ரான டொனால்டு டிரம்ப் தான் தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் காரணம் என தேர்தலுக்கு முன்பாகவே புலம்பத் துவங்கியுள்ளார்.

வியாழனன்று வாஷிங்டனில் நடைபெற்ற இஸ்ரேல் - அமெரிக்க கவுன்சில் தேசிய உச்சி  மாநாட்டில்  அமெரிக்க யூதர்கள் மத்தியில் தனக்கு இருப்பதை விட கமலா ஹாரிசுக்கு அதிக வரவேற்பு இருப்பதாகவும் புலம்பியுள்ளார்.

ஜனாதிபதி போட்டியில் இருந்து தற்போ தைய ஜனாதிபதியும், ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான பைடன் விலகி அக்கட்சி யின் சார்பில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட் பாளராக களத்திற்கு வந்த பிறகு டிரம்ப் வெற்றி பெறும் வாய்ப்புகள் குறைந்து வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வந்தன. 

அமெரிக்க யூதர்கள் மத்தியில் ஹாரிசுக்கு  60 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.  2016 ஆம் ஆண்டு தேர்தலில்  30 சதவீத அமெ ரிக்க யூதர்களின் வாக்குகளை மட்டும் தான் டிரம்ப் பெற்றார். மேலும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் பைடனிடம்  டிரம்ப் தோற்றதற்கு அமெ ரிக்க யூதர்களின் வாக்குகளை பெற முடியாமல் போனதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் டிரம்ப் வெளிப்படை யாக புலம்பியுள்ளார். மேலும் அவர் பேசும் போது தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற் றால் இரண்டு ஆண்டுகளுக்குள் இஸ்ரேலே இருக்காது. அழிக்கப்பட்டு விடும்.  யூதர்கள் கம லாவிற்கு வாக்களித்தால் அந்த அழிவிற்கு நீங்க ளும் தான் காரணம் எனவும் பேசியுள்ளார். 

அவர் வென்ற 2016 தேர்தலில் அமெரிக்க யூதர்களிடையே 30% க்கும் குறைவான வாக்குகளை மட்டுமேபெற்றுள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம் தோற்றத்திற்கு அமெரிக்க யூதர்களின் வாக்குகளை பெறாத தும் முக்கிய காரணமாகும் என அவர் புலம்பினார்.

அமெரிக்க யூதர்கள் பல ஆண்டுகளாக அந்நாட்டு தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியி னரையே ஆதரித்து வருகிறார்கள். இவர்களது வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது.  

உதாரணமாக, பென்சில்வேனியாவில் 4 லட்சம் யூத மக்கள் உள்ளனர். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களது வாக்குகளை அறுவடை செய்ததன் காரணமாக அங்கு  பைடன் 81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிரம்ப் பல நேரங்களில் யூத வெறுப்பு கருத்துக்களை பேசுவதாகவும் அவரை அமெரிக்க யூதர்கள் ஆதரிக்க மாட்டார்கள் எனவும் கமலா ஹாரிஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.