ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகினர்.
ஈக்வடார் தலைநகர் குய்ட்டோவில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுப்புறங்களான பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமானதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் மீட்புக்குழுவினர் தங்க வைத்து வருகின்றனர்.
அதனைதொடர்ந்து நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்க, மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.