world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இந்தோனேசியாவுடன் அமெரிக்கா பொருளாதார ஒப்பந்தம்

இந்தோனேசியாவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அந்நாட்டிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் பொருட் களுக்கு 19 சதவீத வரி விதிக் கப்படும். ஆனால் இந்தோ னேசியா அமெரிக்காவின் பொருட்களுக்கு வரிகள் விதிக்கக் கூடாது. அமெ ரிக்கா வரி செலுத்தாது என டிரம்ப் அறிவித்துள்ளார். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியா, அமெரிக்க  எரிசக்தி துறை, விவசாயத் துறை உள்ளிட்ட துறைகளில் மிக அதிக முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் திட்டத்தில் செக் குடியரசு இணையாது 

நேட்டோ நாடுகள் மூலமாக உக்ரைனுக்கு அமெ ரிக்கா ஆயுதங்களை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி செக் குடியரசு அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்காது என்று அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா தெரி வித்துள்ளார். ஜெர் மனி, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பிரிட்டன், நெதர் லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க ஆயுத நிறு வனங்களிடம் பணம் கொடுத்து ஆயுதங்கள் வாங்கி உக்ரைனுக்கு அனுப்ப உள்ளன.

போல்சானரோவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்: பிரேசில் 

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ மீதான ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில், அவரை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தலைமை வழக்கறி ஞர் தெரிவித்துள் ளார். இந்த வழக்கு தொடர்பாக  வெளி யிடப்பட்ட 517 பக்கங் கள் கொண்ட ஆவ ணத்தில், “குற்றவா ளியான போல்சா னரோ  தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, கிளர்ச்சியைத் தூண்டி, ஜனநா யக சட்ட அமைப்பைச் சீர்குலைக்கத் திட்டமிட்டது தெளி வாகத் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இங்கிலாந்தில் பறிக்கப்படும்  போராட்ட உரிமை 

இங்கிலாந்தில் போராடும் உரிமை பறிக்கப்படுகிறது என முக்கிய தொழிற்சங்கத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்டார்மர் தலைமையிலான அந் நாட்டு அரசு பாலஸ் தீன ஆதரவு பேரணி களை முடக்கும் வகையில் அவை சட்ட விரோதமானவை என முத்திரை குத்து வதுடன் பாலஸ்தீன ஆதரவு போராட் டத்தின் போது பல ரையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இது போராட்ட உரிமைகளை முடக்கும்செயல் என 20 க்கும் மேற்பட்ட ஜனநாயக, தொழிற்சங்க,பாலஸ்தீன அமைப்புகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

காசாவில் ஒவ்வொரு நாளும்  கால்களை இழக்கும் குழந்தைகள் 

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களின் கார ணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 10 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. காசா வில் 40,000 க்கும் மேற்பட்ட குழந்தை கள் இஸ்ரேல் தாக்கு தலின் காரணமாக உடல் உறுப்புகளை இழந்து படுகாய மடைந்துள்ளதாகவும், 1,580 மருத்துவ பணியாளர் கள், 467 மனிதாபிமான உதவி ஊழியர்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் சர்வதேச பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.