world

img

காட்டுத் தீயால் அழிந்து போன அமெரிக்காவின் கிரீன் வில்லே நகரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியரா நெவாடா மலைகளில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் அங்குள்ள தங்கச் சுரங்கங்களின் மத்தியில் அமைந்துள்ள கீரின் வில்லே நகரம் முற்றிலும் எரிந்து அழிந்துள்ளது. 

150 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த கிரீன் வில்லே நகரத்தின்  மொத்த மக்கள் தொகையே 800 பேர் தான். இந்நிலையில் இந்த மக்கள் அனைவரும் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

டிக்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத் தீ முன்னதாக 2 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்தது. தற்போது அது மேலும் பரவி 4 லட்சத்து 89 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.