tamilnadu

img

கொரோனாவால் உருக்குலைந்த அமெரிக்காவின் நியூயார்க் நகரம்...  

வாஷிங்டன் 
உலகின் முதன்மையான கொரோனா மையமாக உள்ள அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடந்த ஒருவாரமாக ஓரளவு கட்டுக்குள் இருந்தது. சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தியதன் விளைவாக கொரோனா வைரஸ் 2-வது இன்னிங்ஸை துவக்கியுள்ளது.  

குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் அதிக சேதாரத்தை சந்தித்தது நியூயார்க் நகரம் தான். அங்கு இதுவரை 3 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரத்து 372  பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஒரு நாளில் சராசரியாக 1500 பேருக்கு பாதிப்பும், 100 பேர் பலியாகி வருகின்றனர். கொரோனவால் உருகுலைந்துள்ள நியூயார்க்கை அமெரிக்க அரசு சீர் செய்துவிட்டால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையும். 

நியூயார்க் போல நியூஜெர்ஸி, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், மாசசூசெட்ஸ் ஆகிய மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. மேற்கூறப்பட்ட நகரங்களில் பலி எண்ணிக்கை 4000-க்கும் அதிகமாக உள்ளது. மாசசூசெட்ஸ் நகரில் கொரோனாவால் 7 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். டெக்சாஸ் புளோரிடா ஆகிய மாகாணங்களிலும் கொரோனா தாக்கம் அபாய கட்டத்தில் பயணித்து வருகிறது.