வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவின் பிரிவில் திடீர் புகை ஏற்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கிதொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.தற்போதைக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 வீரர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேர் ரஷ்யாவின் காஸ்மோனாட்டுகள். மூன்று பேர் அமெரிக்கா்கள், பிரான்ஸ் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவின் பிரிவில் திடீரென பிளாஸ்டிக்புகை வாசனை வந்தது. இதனால் அலாரம் ஒலித்தது . பிளாஸ்டிக் புகை வாசனை அங்கிருந்தவர்களை சிறிது நேரம் அதிர்ச்சியடைய வைத்தது. பில்டர் கருவிகள் மூலம் புகையை கட்டுப்படுத்தினர். பின்னர் திட்டமிட்டபடி ரஷ்ய விண்வெளிவீரர்கள் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டனர். அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளால் 2025 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு விலகி தனி விண்வெளி நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.