world

img

காலநிலை மாற்றம் புவிவெப்பமயமாதலால் வழக்கத்தைவிட அதிக பாதிப்புகளை உருவாக்கும் புயல்கள்

காலநிலை மாற்றம் புவிவெப்பமயமாதலால்  வழக்கத்தைவிட அதிக பாதிப்புகளை உருவாக்கும் புயல்கள்

சிங்கப்பூர், நவ.11 - காலநிலை மாற்றத்தால் புவி வெப்ப மயமாதல் அதிகரித்து வரும் நிலை யில் புயல்களின் பாதிப்பு வழக்கத்தை விட மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞா னிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த புயல்களால் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கக்கூடிய நாடுகளாக தெற்குலக குறிப்பாக தெற்காசிய நாடுகளே உள்ளன.  கடந்த வாரம் பிலிப்பைன்ஸில் பெரும் அழிவை ஏற்படுத்திய கல்மேகி  புயல் இந்த ஆண்டின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக உள்ளது. இப்புய லால் 200 க்கும் மேற்பட்ட மக்கள் பலி யாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து போயுள்ளன. பலகோடி ரூபாய் மதிப்பில் சேதத்தை உருவாக்கிய அப்புயல் தற்போது வியட்நாமை நோக்கி நகர்ந்துள்ளது.  கடந்த ஆண்டு ஒரே மாதத்தில் ஆறு சக்தி வாய்ந்த புயல்கள் பிலிப்பைன்ஸை தாக்கின. இதனுடன் ஒப்பிடும் போது  2025 நவம்பர் மாதம் ஒரே நேரத்தில் நான்கு வெப்பமண்டலப் புயல்கள் உருவாகியுள்ளது. இது புயல்கள் குறுகிய கால இடைவெளி களுக்குள் உருவாகி அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற ஆபத்தை காட்டுகிறது.  ஒரு ஆண்டு முழுவதும் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை என்றாலும், அவை ஒரே பருவத்தில் உருவாகி மிகக் குறுகிய காலத்தில் வீசி அதிக பாதிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி திருபாஜோதி சமந்தா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள கிராந்தம் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் வானிலை ஆய்வாளர் பென் கிளார்க் இது குறித்துக் கூறுகை யில், வடமேற்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடல் ஆகிய இரண்டிலும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அசாதாரண மாக உள்ளது. இந்த அதிக வெப்ப நிலையால், கல்மேகி புயல் அதிக சக்தி வாய்ந்ததாகவும், அதிக மழையைக் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வுக்கு புவி வெப்பமயமாதலே முதன்மைக் காரணம் என குறிப்பிட்டுள்ளார். பசுமை இல்ல வாயுக்கள்... உலக நாடுகள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படு த்த தவறுவதே புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதற்கும் அதன் மூலமாக வெப்பமண்டலப் புயல்கள் தீவிரமாக வீசுவதற்கும் காரணமாகிறது என விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது காலநிலை மாற்றத்தின் காரணமாக, முதலில் கடலின் மேற் பரப்பு வெப்பநிலையை அதிகரிக்கிறது. இது வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவை அதிகரித்து புயலின் தீவிரத்தை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர். எனினும் வரும் நாட்களில் உருவா கும் அனைத்துப் புயல்களும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. எனினும் வெப்பமான கால நிலையில் அதிக மழைப்பொழிவு மற்றும் பலமான காற்றுடன் கூடிய சக்தி வாய்ந்த புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.