world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கருங்கடல் போரை நிறுத்த  ரஷ்யா-உக்ரைன் ஒப்புதல்

சவூதி அரேபியா தலைநகரில் ரஷ்ய-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருங்கடல் பகுதிகளில் கடற்படை போர்நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு முன் போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்வது, 30 நாட்களுக்கு எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நிறுத்துவது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவ்வொப்பந்தத்தை மீறியதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய காட்டுத் தீ தொடர்ந்து தீவிரமடைகின்றது

தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ தொ டர்ந்து தீவிரமடைகின்றது. இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்துள்ளன. தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் 4 பேர் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதுவரை 27,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் என 4,650 பேர் 150 ஹெலிகாப்டர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜெர்மன் நாடாளுமன்றம்  அதிகாரப்பூர்வமாக கலைப்பு

ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் அந்நாட்டு அமைச்சரவையை அதிகாரப்பூர்வமாக கலைத்துள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை முன்னாள் அதிபரான ஓலாஃப் சோல்ஸ் இடைக்கால அதிபராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றிய கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. எனினும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.  

அமெ. போர்க் கப்பல் மீது  ஹவுதி பதிலடித் தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் கள்  மீதும் இஸ்ரேல் தலைநகர் கடெல்அவிவ் மீதும் ஹவுதிகள் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ள னர். ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்ததாவது, புதனன்று சில மணி நேரங்கள் ஹவுதி படைகள் செங்கடலில் இருந்த அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தின. வடக்கு யேமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவோம் எனவும் அறிவித்துள்ளார்.

கோகோகோலாவில் பிளாஸ்டிக் துகள்கள்  

அமெரிக்காவில் 10,000 குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கின்றது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 6 முதலே இந்த பணி நடைபெற்று வருகின்றது. எனினும் மார்ச் 24 அன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வ மாக திரும்பப் பெற்று வரும் நிகழ்வு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா துணை ஜனாதிபதி கிரீன்லாந்து பயணம்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் வெள்ளிக்கிழமை யன்று கிரீன்லாந்திற்கு பயணம் மேற் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கனடா, பனாமா கால்வாய், கிரீன்லாந்து உள்ளிட்ட பிரதேசங்களை அமெ ரிக்காவின் மாகாணங்களாக  ஆக்கிரமிக்கப் போவதாக தெரிவித்து வந்தார். மேலும் இதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். தேவைப்பட்டால் ஆயுத பலத்தை கூட பயன்படுத்துவேன் என கடந்த சில வாரங்களுக்கு முன் மிரட்டல் விடுத்திருந்தார்.

 வான்ஸ் இன் பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவி உசா வான்ஸ் அமெரிக்க எரிசக்தித்துறை செயலாளர் கிரிஸ், தேசிய பாது காப்பு ஆலோசகர் மைக் வாட்ஸ் ஆகியோருடன் வியாழனன்று கிரீன்லாந்து செல்கிறார். இந்த பயணத்திற்கு கிரீன்லாந்து மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த பயணத்தின் போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ராணு வத்தளத்திற்கு துணை ஜனாதிபதி உள்ளிட்ட அமெரிக்கா அதிகாரிகள் செல்லலாம் என கூறப்படுகின்றது.

டிரம்ப்பின் பதவியேற்புக்கு முன்னதாகவே அமெரிக்கா சார்பில் ஒரு குழு கிரீன்லாந்திற்கு சென்றது. அப்போது கிரீன்லாந்து, இது சுயாதீன ஆட்சிப்பகுதி எனவும் அமெரிக்காவின் ஒரு பகுதி யாக மாற விரும்பவில்லை என்று கிரீன்லாந்து பிரதமர் முடே எக்டே தெரிவித்திருந்தார்.  

இந்த பயணத்திற்கு முன் உசா வான்ஸ், நமது இரு நாடுகளுக்கிடையிலான மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டாடவும், வரும் ஆண்டுகளில் எங்கள் உறவு வலுவாக வளரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தவுமே கிரீன்லாந்து செல்வதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து கிரீன்லாந்து அரசியல் தலைவர்களிடையே கடுமையான கோபத்தை  எழுப்பியுள்ளது. கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் அணுகுமுறை “மிகவும் ஆக்ரோஷமானது” என அந்நாட்டின் பிரதமர் முடே குற்றம் சாட்டியுள்ளார்.

எங்கள் மீது அதிகாரத்தை திணிப்பது என்ற அமெரிக்காவின் நோக்கம் தெளிவாக உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.