articles

img

அகில இந்திய மாநாடு 2.1

உயரப் பறந்த மதுரைச் செங்கொடி!

1972-அகில இந்திய மாநாட்டு நினைவலைகள்

1972 மதுரை... தமுக்கம் கலையரங்கின் வாயிலில்  செங்கொடிகள் பறக்க,  நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நின்றிருந்தேன் நான். ஒரு இளம் தொண்டனாக, முதன்முறையாக ஒரு அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்பதில் ஏற்பட்ட பெருமிதம் இன்றும் நெஞ்சில் அலை அடிக்கிறது. உத்தம பாளையம் தாலுகாவின் கட்சி அலுவலக செயலாள ராக இருந்த எனக்கு, அன்று அந்த வரலாற்று நிகழ்வில் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது - வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத  அனுபவம். தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், தோழர் பி.  சுந்தரய்யா, தோழர் ஏ.கே. கோபாலன், தோழர் பி. ராமமூர்த்தி போன்ற தலைவர்களை நேரடியாக காணும் வாய்ப்பு அன்று முதல் முறையாக கிடைத்தது. அந்த காட்சி என் மனக்கண் முன் இன்றும் விரிகிறது. உயிர்பெற்ற தியாகம் செங்கொடி ஏற்றப்பட்ட அந்த தருணத்தில், உலக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டப் பாரம் பரியம் அந்த மைதானத்தில் உயிர் பெற்றது. கோடானு கோடி உழைக்கும் மக்களின் கனவு களின் பிரதிநிதிகளாக நாடெங்கிலும் இருந்து  வந்திருந்த தலைவர்கள், ஒரு புதிய சமூகத்திற்கான  வழிகாட்டிகளாக அங்கே நின்றனர். தியாகிகளின் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்திய போது, அவர்களின்  தியாகங்கள் வீணாகவில்லை என்ற உறுதியுடன் ஒவ்வொரு தோழரும் தங்கள் கைகளை தட்டினர்.  அந்த ஒற்றுமையின் ஒலி இன்றும் என் காது களில் தொடர்கிறது. தென்னகமும் வடநாடும் -  உணவுச் சந்திப்பின் கதை வடநாட்டு தோழர்களுக்கும் தென்னக உணவுக் கும் இடையிலான முதல் சந்திப்பின் சாட்சியாக இருந்தேன். ரசத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வடநாட்டுத் தோழர்கள், சாதத்தால் அணை கட்டி ரசம் ஓடுவதைத் தடுத்த காட்சி இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. “கியா கியா?” (இது என்ன?) என்ற கேள்வியோடு அவர்கள் ரசத்தை சந்தித்த தருணம் அது. அவர்களின் சப்பாத்தி பழக்கமும், நமது சோறு-ரசம்-மோர் கலாச்சாரமும் சந்தித்த முதல் உணவு சங்கமம் அது. மூன்று வேளை உணவும் சுவையாக தயா ரிக்கப்பட்டு, நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. உணவு பரிமா றும் தொண்டனாக நானும் இருந்ததால், இந்த கலாச்சார பரிமாற்றத்தின் நேரடி சாட்சியாக இருந் தேன். இன்று, 53 ஆண்டுகளுக்குப் பின், இந்த உணவுக் கலாச்சார இடைவெளி பெரும்பாலும் குறைந்துவிட்டது என்பது மகிழ்ச்சிக்குரியது. போர்க்குணமிக்க உரை வீச்சுகள் - தலைவர்களின் முழக்கம் மாநாட்டுத் தலைவர்களின் பேச்சுகள் ஒவ்வொன் றும் ஒரு அக்னிப் பிரவாகமாக இருந்தது. இ.எம்.எஸ் அவர்களின் தெளிவான பகுப்பாய்வுகள், சுந்த ரய்யாவின் புரட்சிகர உரைகள், ஏ.கே கோபால னின் விவசாய மக்களுக்கான குரல், பி.ராமமூர்த்தி யின் தொழிலாளர்களுக்கான போராட்ட அறை கூவல் - இவையெல்லாம் எங்களை புதிய உத்வேகத் துடன் நிரப்பின. ஒவ்வொரு உரையும் வர்க்க உணர்வை தீவிரப்படுத்தி, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. அந்த தலைவர் களின் பேச்சுகளில் இருந்த தெளிவு, நம்பிக்கை மற்றும் போராட்ட உணர்வு இன்றும் இதயத்தில் ஒலிக்கிறது. ஒவ்வொரு அணுவிலும்  புரட்சியின் சுவாசம் மாநாட்டு அரங்க ஏற்பாடுகள் அனைத்திலும் கூட்டு உழைப்பின் வலிமை தெரிந்தது. எளிய தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிய அந்த  ஒற்றுமையின் காட்சி மனதை நெகிழ வைத்தது. மாநாடு அரங்கைச் சுற்றி எங்கும் சிவப்பு கொடி கள், போஸ்டர்கள், பேனர்கள் என அலங்கரிக்கப் பட்டிருந்தன. இடைவேளைகளில் தலைவர்கள் எளிய தொண்டர்களுடன் கலந்து உரையாடியது கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். அங்கே வர்க்க  பாகுபாடுகள் இல்லை - அனைவரும் தோழர் களாக மட்டுமே இருந்தனர். செங்கடலாய் பெருகிய மக்கள் அலை - ஊர்வலமும் பொதுக்கூட்டமும் மாநாட்டின் இறுதி நாள், அரசரடி மைதானத்தி லிருந்து ரேஸ்கோர்ஸ் மைதானம் வரை நடந்த ஊர்வலம் கண்ணுக்கெட்டிய தூரம் செங்கடலாய் பெருகியது! நூற்றுக்கணக்கான லாரிகளில், மாட்டு  வண்டிகளில் இரண்டு முதல் மூன்று லட்சம் தோ ழர்கள் திரண்டிருந்தனர். கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், நரிக்குறவர் ஆட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் என தமிழ் மண்ணின் கலாச்சார வடிவங்கள் அனைத்தும் ஊர்வலத்தை அலங்கரித்தன. ஊர்வலத்தில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த பதாகைகளை உயர்த்தி அணி வகுத்தனர். விவசாயிகள் நிலச்சீர்திருத்தம், கூலி  உயர்வு கோரி முழங்கினர். மாணவர்கள் கல்விக் கான உரிமைகளை வலியுறுத்தினர். பெண் தொண்டர்கள் சமஉரிமைக்காக குரல் கொடுத்த னர். ஒவ்வொரு பதாகையும், ஒவ்வொரு கோஷமும்  அரசியல் விழிப்புணர்வின் தெளிவான வெளிப் பாடுகளாக இருந்தன. மிகப்பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வந்திருந்த மக்கள், தரையில் அமர்ந்து, தங்கள் உணவுப் பொட்டலங்களை பிரித்து, சாப்பிட்டுக்கொண்டே பொதுக்கூட்டத்தை ரசித்த னர். தோழர் பி. ராமமூர்த்தி, தோழர் என்.சங்கரய்யா  போன்றோரின் தமிழ் உரைகளுக்கு மக்கள் கர வொலி எழுப்பி வரவேற்றனர். கடைசி வரை பங்கேற்று, பின்னர் லாரிகளில் ஏறி ஊருக்குத் திரும்பிய அந்த ஆர்வம் இன்றும் மனதில் பசுமை யாக உள்ளது. அன்று திரண்டிருந்த தொண்டர்களில் எண்பது  சதவீதம் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையும், தீர்க்க மான புரட்சிகர சிந்தனையும் கொண்ட அந்த இளை ஞர்கள், வியர்வை சிந்தி உழைத்து, நாள் முழு வதும் மாநாட்டு ஏற்பாடுகளில் தன்னலமின்றி ஈடு பட்டனர். வெயில், மழை பாராமல் வந்து குவிந்து, மாநாட்டின் வெற்றிக்கு காரணமானவர்கள் அவர்களே. வண்ணமயமான தமிழக கலாச்சாரம் ஊர்வலத்தில் தமிழக கலாச்சாரம் அனைத்து  வடிவங்களிலும் மலர்ந்திருந்தது. ஒயிலாட்டக் குழுவினர் இடுப்பில் சிவப்பு துணி கட்டி, தலையில் மயில் தோகை வைத்து, கர்ஜிக்கும் இசைக்கு ஏற்ப  அசைந்தாடினர். கரகாட்டக்காரர்கள் தலையில் கரகத்துடன் சுற்றி வந்து அசத்தினர். தப்புக்  கொட்டும் சத்தமும், நாதஸ்வரத்தின் இனிமை யான இசையும் ஊர்வலத்தை உயிரோட்டம் நிறைந்ததாக மாற்றின. நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் வறுமையை யும் மறந்து, கவலைகளையும் துறந்து, ஊர்வ லத்தை சொந்த விழாவாக கொண்டாடினர். பாரம் பரிய வில்லுப்பாட்டு மூலம் தொழிலாளி வர்க்க போராட்ட வரலாற்றை விளக்கிய குழுக்களும் இருந்தன. “தொழிலாளரே, ஒன்று சேருங்கள்!” என்ற கோஷங்கள் பல மொழிகளில் ஒலித்தன. நகரமும் விழித்தெழுந்த மக்களும் ஊர்வலம் மதுரை வீதிகளில் புயல் போல்  விரைந்து வந்தபோது, நகர மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை நிறுத்திவிட்டு, வீதிகளில்  நின்று வியப்புடன் பார்த்தனர். வீட்டுக் கதவுகளைத் திறந்து, ஜன்னல்களில் ஒட்டிக்கொண்டு, மாடி களில் நின்று பார்த்த மக்கள் இந்த அரசியல் விழிப் புணர்வு பேரணியை அசத்தல் என்றே நினைத்த னர். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கை அசைத்த னர். சில இடங்களில் மக்கள் நீர், பழங்கள் வழங்கி  வரவேற்றனர். “இது என்ன ஊர்வலம்?” என்று வியந்து கேட்ட  பொதுமக்களுக்கு, “இது உழைக்கும் மக்களின் கட்சி! உங்களுக்காகவே போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலம்!” என்று பெருமை யுடன் பதில் அளித்தோம். பலர் ஆர்வத்துடன் ஊர்வ லத்துடன் இணைந்து கொண்டனர். அன்று விதைக் கப்பட்ட விழிப்புணர்வு விதைகள் இன்றும் மதுரை யின் அரசியல் களத்தில் வளர்ந்து நிற்கின்றன. 53 ஆண்டுகளுக்குப் பிறகு -  மீண்டும் மதுரையில் இப்போது, 53 ஆண்டுகள் கழித்து, 24வது அகில இந்திய மாநாடு மீண்டும் மதுரையில் நடை பெற உள்ளது. உணவுக் குழுவிலும், வரவேற்புக் குழுவிலும் சிறப்பு அழைப்பாளராக மீண்டும் பணி யாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1972இல் இளம்  தொண்டனாக இருந்தவன், இன்று அனுபவம் நிறைந்த தோழனாக மீண்டும் அதே மண்ணில் நிற்கிறேன். அன்று தமுக்கம் கலையரங்கம் மிகப்பெரிய அரங்கமாகத் தோன்றியது. ஆனால் இப்போது, கட்சியின் வளர்ச்சியும், சக்தியும், மக்களின் ஆதர வும் பெருகியதால், அதைவிட பல மடங்கு பெரிய  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1972 மாநாட்டில்  மிகக் குறைந்த நிதியிலேயே செய்த ஏற்பாடுகள், இன்று மக்களின் ஆதரவால் பல மடங்கு விரி வடைந்துள்ளன. மூன்று தலைமுறைகளின் இணைப்பு 2025 மாநாடு என்பது மூன்று தலைமுறை களின் இணைப்பு. 1972ல் இளைஞர்களாக இருந்த வர்கள், இன்று அனுபவமிக்க மூத்த தலைவர்கள். அவர்களது வழிகாட்டுதலில், நடுத்தர வயதின ரும், புதிய இளம் தலைமுறையினரும் ஒன்றி ணைந்து பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு தலை முறையும் கட்சிக்குள் தங்கள் சொந்தப் பங்களிப்பு களை செய்துள்ளனர். மாறிவரும் உலகிற்கேற்ப புதிய சிந்தனைகளை உள்வாங்கியபடியே, இளம் தலைமுறையினர் அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக நிற்கின்றனர். இந்த மூன்று தலைமுறை இணைப்பை 2025 மாநாட்டில் காணவிருக்கிறோம். புதிய சவால் களை எதிர்கொள்ளும் புதிய திட்டங்கள், ஆனால்  மாறாத கொள்கை உறுதி - இதுவே மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும். 1972ல் இருந்த உற்சாகம், இன்றும் குறையாமல், புதிய தலை முறையிடம் கைமாறியுள்ளது. இன்றைய சவால்களும்  நாளைய வெற்றிகளும் 1972ல் இருந்த சவால்கள் வேறு; 2025ல்  நாம் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு. கால னியாதிக்கம் முடிவடைந்து விட்டாலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகியுள்ளது. உற்பத்தி உறவுகள் சிக்கலடைந்துள்ளன. போரும்,  பஞ்சமும், பிரிவினைகளும் புதிய வடிவங்களில் தொடர்கின்றன. ஆனால், போராட்ட வடிவங்கள் மாறினாலும், அதன் சாரம் மாறவில்லை. இன்றைய சவால்களை எதிர்கொள்ள, புதிய  தொழில்நுட்பங்களை புரிந்துகொண்டு, அதனு டன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. சமூக ஊடகங்கள், மின்னணு பத்திரிகைகள், செயற்கை நுண்ணறிவு - இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு, போராட்டத்திற்கு பயன்படுத்த வேண்டி யுள்ளது. இந்த புதிய களங்களில் போராடும் திறனை 2025 மாநாடு நிச்சயம் வளர்க்கும்.  வரலாற்றின் தொடர்ச்சியில் நாம் 1972ல் மதுரையில் தமுக்கம் கலையரங்கில் விரிந்த அந்த செங்கொடி, இன்று நாடு முழுவதும்  பல கோடி உழைக்கும் மக்களின் நம்பிக்கைக்குறி யாக பறக்கிறது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், இன்றைய இந்தியாவை வடிவமைப் பதில் தங்கள் பங்கை ஆற்றியுள்ளன. தலைமுறை கள் மாறினாலும், போராட்டம் தொடர்கிறது - இது  தான் வரலாற்றின் இயக்கவியல். புதிய தலைமுறையுடன், புதிய சவால்களு டன், ஆனால் அதே உற்சாகத்துடன் 24வது மாநாட்டை சந்திக்க தயாராகியுள்ளோம்