tamilnadu

img

தியாகிகள் ஜோதிக்கு எழுச்சிமிகு வரவேற்பு

தியாகிகள் ஜோதிக்கு எழுச்சிமிகு வரவேற்பு

சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் ஏற்றப்பட உள்ள சின்னியம்பாளையம் தியாகிகள், சேலம் சிறைத்தியாகிகள் நினைவு ஜோதிக்கு வழியெங்கும் எழுச்சிமிகு வரவேற்பை மார்க்சிஸ்ட் கட்சியினர் வழங்கினர். மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந் திய 24 ஆவது மாநாடு, புதனன்று (நாளை) துவங்கி, ஏப்ரல் 6 ஆம்  தேதி வரையில் மதுரையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், தியாகிகளை நினைவு கூறும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தியாகி களின் நினைவு ஜோதி கொண்டு செல் லப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவையில் இருந்து சின்னியம்பாளை யம் தியாகிகள் நினைவு ஜோதி, மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமையிலும், சேலத்தில், சேலம் சிறைத்தியாகிகள் நினைவு ஜோதி, மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு தலைமையிலும் திங்களன்று புறப்பட் டது. இந்த ஜோதி பயணம், மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து, பல்வேறு பகு திகளில் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு புதனன்று மதுரையை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட் டுள்ளது. இதன்தொடர்ச்சியாக சின்னியம்பா ளையம் தியாகிகள் மேடையில் துவங் கிய ஜோதி பயணத்திற்கு வழியெங் கும் எழுச்சிமிகு வரவேற்பை மார்க் சிஸ்ட் கட்சியினர் கொடுத்தனர். சூலூர் புதிய பேருந்து நிலையத்தில், சூலூர் இடைக்குழு செயலாளர் ஏ.சந்திரன் தலைமையில் ஜமாப் அடித்தும், பட்டா சுகள் வெடித்தும் உற்சாகமாக வரவேற் பளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத் தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில்,  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே. மனேகரன், வி.இராமமூர்த்தி, மூத்த தோழர் என்.அமிர்தம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி திருப்பூர் மாவட்டம் அவிநாசி வந்தடைந்தது. தாலுகா செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை  யடுத்து திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால் தலைமையில் வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை யடுத்து பல்லடத்தில் ஒன்றியச் செயலா ளர் வை.பழனிச்சாமி தலைமையில் வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிகளில் மாவட்டச் செய லாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார் ச.நந்தகோ பால், செ.மணிகண்டன் ஆர்.காளியப் பன், எஸ்.பவித்ரா தேவி, மாவட்டக்குழு  உறுப்பினர்கள் பழனிசாமி, ஆர். பரம சிவம், ப.சௌந்தர்ராஜன், பி.ஆர்.கணேசன், எஸ்.பானுமதி, ஆர். பழனிச் சாமி, பி. செல்லதுரை, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயணக்குழு வினருக்கு மூத்த தோழர்கள் எம். ராஜ கோபால் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகி யோர் பயனாடை அணிவித்தனர்.  

இதேபோன்று, உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர். மதுசூத ணன், கனகராஜ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பஞ்சலிங்கம், சசிகலா மற்றும் உடுமலை ஒன்றியச் செயலாளர் ஜெகதீ சன் ஆகியோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் பேருந்து நிலையத்தின் எதிரில் நடைபெற்ற தியாகிகள் சுடருக்கு கட்சியின் தாலூகா செயலாளர் ஆர்.வி. வடிவேல் தலைமையில் வரவேற்பு தரப்பட்டது. இதில் திரளனோர் பங் கேற்றனர். இதனையடுத்து, திண்டுக் கல் மாவட்டத்திற்கு தியாகிகள் சுடர் சென்றது. சேலம் சிறைத்தியாகிகள் ஜோதி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டில்லி பாபு தலைமையில் செல்லும் சேலம் சிறைத்தியாகிகளின் ஜோதி பயணக்குழுவிற்கு, சேலம்  மாவட்டத்தில் கந்தம்பட்டி, தாதகாப் பட்டி, சீலநாயக்கன்பட்டி, பனமரத்துப் பட்டி பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பு  அளிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாந கரக்குழு சார்பில் தாதகாப்பட்டி பகுதி யில் கிழக்கு மாநகரச் செயலாளர் பச்ச முத்து தலைமையிலும், சீலநாயக்கன் பட்டி பகுதியில் கிளைச் செயலாளர் எம்.சி.சேகர் தலைமையிலும் வரவேற்பு  அளிக்கப்பட்டது.

இதில் சிபிஎம் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிர வீன்குமார், அமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர். பனமரத்துப்பட்டி பகுதியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் செவந்தியப்பன் தலைமையிலும், கந்தம்பட்டிபகுதியில் சிபிஎம் மாநகர மேற்கு செயலாளர் கணேசன் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக் கப்பட்டது. ராசிபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ் பெரியசாமி தலைமை யில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கோ.செல்வ ராசு, கே. சின்னசாமி, பி.ராணி உள்ளிட் டோர் பங்கேற்றனர். எலச்சிபாளையத் தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்விற்கு, மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கமணி, தமிழ்மணி, சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இத னையடுத்து பள்ளிபாளையத்தில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்விலும் திரளா னோர் பங்கேற்றனர்.  சேலம் சிறை தியாகிகள் நினைவு சுடர் பயணத்திற்கு ஈரோடு மாவட் டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற வரவேற் புக் கூட்டத்திற்கு நகர செயலாளர் வி. பாண்டியன் தலைமை வகித்தார்.

பய ணக்குழுவிற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர். கோமதி, எஸ்.சுப்ரமணியன், சி.முருகே சன் மற்றும் பி.சுந்தரராஜன் உள்ளிட்ட திராளனோர் பங்கேற்று உற்சாக வர வேற்பளித்தனர். அதேபோல், சோலார் பகுதியில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராஜா தலைமையில் எழுச்சி முழக் கங்களுடன் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பயணக்குழு சிவகிரியை அடைந்தது. அங்கு கொடுமுடி-மொடக்குறிச்சி தாலுகா செயலாளர் எம்.சசி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சின்னியம் பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி  பயணத்தில் உடுமலை துரையரசன் கலைக்குழுவும், சேலம் சிறைத்தியாகி கள் நினைவு ஜோதி பயணத்தில் தஞ்சை  தியாகி என்.வெங்கடாசலம் கலைக் குழுவினரின் பாடல்கள் மக்களின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் அமைந் துள்ளது.