world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கிரீன்லாந்தில் குழப்பத்தை  உருவாக்கும் அமெரிக்கா 

கிரீன்லாந்தை டென்மார்க் முறையாக பாதுகாக்கவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பேசியுள்ளார். கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற  திட்டத்தை தீவிரப்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக கிரீன்லாந்தை அமெரிக்காவால் மட்டுமே சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

60 முறைக்கு மேல்  ஏமன் மீது குண்டு வீச்சு 

ஏமனின் தலைநகர் சனா உட்பட சில நகரங்கள்  மீது சுமார் 60 முறைக்கு மேல்  அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் எனவும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் 40 க்கும் மேற்பட்ட முறையும் மாலையில் 26 முறையும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் வரி:  மெக்சிகோ எதிர்ப்பு

இறக்குமதி வாகனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, இருநாட்டு ஆட்டோ மொபைல் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மெக்சிகோ வில் இருந்து 25 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வரியின் காரணமாக இந்த வர்த்தகத்தில் பாதிப்பு உருவாகும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலம்பியா பல்கலை.  தலைவர் ராஜினாமா 

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் தலைவராக இருந்த கத்ரீனா ஆம்ஸ்ட்ராங் தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார். இஸ்ரேலின் இனப்படு கொலைக்கு எதிராக அமெரிக்க மாணவர்களின் போராட்டக்களமாக இந்த பல்கலைக்கழகம் இருந்ததால் அதன் ஆராய்ச்சித்துறைக்கு கொ டுக்க வேண்டிய 400 மில்லியன் நிதியை டிரம்ப் நிறுத்தினார். இந்த நிதியை வாங்க விதிக்கப்பட்ட  நிபந்தனைகளுக்கு  பல்கலைக்கழகம் இரை யாகிவிட்டது என கத்ரீனா ராஜினாமா செய்த தாகக் கூறப்படுகின்றது. 

ஆஸ்திரேலியாவில்  தேர்தல் அறிவிப்பு 

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் மே 3 அன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் அல்பனீஸ் ஆட்சிக்காலம்  முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மார்ச் 28 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசு இயங்கி வருகின்றது. அந்நாட்டில் அதி கரித்துள்ள அன்றாட வாழ்க்கைச் செலவு, வீடுகள் பற்றாக்குறை உள்ளிட்ட நெருக்கடி யான சூழலால் தற்போதைய அல்பனீஸ் அரசுக்கு எதிராக முடிவுகள் வெளிவரலாம் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.