world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரம்ஜான் நாளில்  பாலஸ்தீனர்கள் படுகொலை

மார்ச் 31 அன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ராம்ஜான் கொண்டாடினர். இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் பாலஸ்தீனர்களும் சிதைக் கப்பட்ட காசா கட்டட இடிபாடுகளுக்கு இடையே தொழுகை நடத்தினர். இந்த ரம்ஜான் நாளன்றும் இஸ்ரேல் ராணுவம் தனது இனப்படுகொலை தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து குண்டுகளை வீசி வந்தது. இந்த கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 35 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது.

மியான்மர் : தொழுகையின் போது பலியான துயரம்

மார்ச் 28 மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது தொழுகையில் இருந்த சுமார் 700 முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டின் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் போது சுமார் 60 மசூதிகள் முழுமையாகவோ பகுதியாகவோ இடிந்துள்ளன. நிலநடுக்கத்தில் 1,700 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த 700 நபர்கள் உள்ளடங்குவார்களா என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

30 லட்சம் ஆப்கானியர்களை  வெளியேற்ற திட்டம் 

இந்த ஆண்டு 30 லட்சம் ஆப்கானிஸ்தான் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. தாமாக முன் வந்து வெளியேறுவதற்கான காலம் மார்ச் 31 உடன் முடிவடைந்து விட்டதால் இவ்வாறு அறி வித்துள்ளது. போதிய ஆவணங்கள் இன்றி அந் நாட்டில் உள்ள ஆப்கானியர்களை  2023 முதல் பாக் அரசு வெளியேற்றி வருகின்றது. கடந்த 18 மாதங்களில் சுமார் 8,45,000 ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 30 லட்சம் ஆப்கானிஸ்தான் மக்கள் அந்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சூடானில் அதிகரிப்பு 

சூடானில் குழந்தைகளுக்கு எதிரான வன் முறைகள் அதிகரித்துள்ளன. 2024 இன் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது சூடா னில் குழந்தைகளின்  இறப்பு விகிதம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது என ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் கடந்த வாரம் தெரி வித்துள்ளது. உள்நாட்டு போரின் காரணமாக குழந்தைகள் படுகொலை செய்யப்படுவது, உடல் பாகங்களை இழப்பது, பாலியல் வன்கொடுமை என மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

ஜெலன்ஸ்கிக்கு மீண்டும்  மிரட்டல் விடுத்த டிரம்ப் 

அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தத்தி லிருந்து ஜெலன்ஸ்கி பின்வாங்க முயற் சிக்கிறார் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அப்படி அவர் பின் வாங்கினால் அது அவருக்கு சிக்கல் களை உருவாக்கும். மிகப் பெரிய பிரச்சனைகளை உருவாக்கும் என எச்சரித்துள்ளார். உக்ரைனின் கனிம வளங்களில் 50 சதவீதத்தை கொடுக்க ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார். அதையடுத்து அந்த ஒப்பந்தம் மீண்டும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு கையெழுத்தாக உள்ளதாக அமெ ரிக்க தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் டிரம்ப் ஜெலன்ஸ்கியை எச்சரித்துள்ளார். 

எங்களிடமும் ஏவுகணை உள்ளது: அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

ஈரான் மீது குண்டு வீசுவோம் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து,  எங்களிடமும் ஏவுகணைகள் உள்ளது என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் அரசு அணுசக்தி ஆராய்ச்சியை தீவிரப் படுத்தி வருகின்றது. இதனை அவர்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.

 குறிப்பாக ஈரான் அரசு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச் சாட்டை முன்வைத்து வருகின்றது. இந்த குற்றச் சாட்டை மறுத்து தங்களது உள்நாட்டு எரிசக்திக் காக அணுசக்தி துறையை பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருகின்றது.  மத்திய கிழக்கில் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவாக இல்லாத நாடாக ஈரான் உள்ளது. இத னால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் 2015 இல் ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டன.

 டிரம்ப் ஆட்சியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான் யுரேனி யம் செறிவூட்டல் தொழில்நுட்பம் மூலம் அணு சக்தி துறையில் தீவிரமான ஆராய்ச்சியை தொடர் ந்தது. இதனால் பல தடைகளை அந்நாட்டின் மீது டிரம்ப் விதித்தார். தற்போது மீண்டும் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றார். இந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் மற்றும் மதத் தலைவர் அலி கொமேனி ஆகியோர் உடன்படவில்லை.

 இந்நிலையில் அமெரிக்காவின் ஒப்பந்தத் திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்நாட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்து வோம். இந்த தாக்குதல் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். மேலும் நான்கு ஆண்டு களுக்கு முன் விதித்தது போல மிக கடுமையான பொ ருளாதாரத் தடைகளை ஈரான் மீதும் அதன் நட்பு நாடுகளின் மீதும் விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  இந்த மிரட்டலுக்கு அடிபணியாத ஈரான் அரசு,  உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திறனுடன் எங்களிடம் ஏவுகணைகள் உள்ளன. அதில் சில ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன என அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்துள்ளது.