மியான்மர்,மார்ச்.29- மியான்மர் நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் நேற்று திடீரென 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது, இடிபாடுகளில் சிக்கி 2,376 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.
தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழப்பு, 68 பேர் படுகாயமடைந்துள்ளனர்.