states

img

ஒடிசா: மாநகராட்சி கூடுதல் ஆணையரை தாக்கிய பாஜக நிர்வாகிகள்!

ஒடிசாவில் மாநகராட்சி கூடுதல் ஆணையரை பாஜக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆளும் ஒடிசாவில், புவனேஷ்வர் மாநகராட்சி கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூவை, பாஜகவினர் அலுவலகத்தில் இருந்து இழுத்து சென்று கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக மாநகராட்சி உறுப்பினர் ஜீவன் ரௌத் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜகன்னாத் பிரதானிடம் சாஹூ பேசியதாகவும், அதற்காக அவர் தாக்கப்பட்டதாகவும் ரத்னாகர் சாஹூ தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு அரசு உயர் அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.