சிபிஐ(எம்) அகில இந்திய மாநாடு நிகழ்வுகள் ஏப்ரல் 1 மாலை முதலே எழுச்சித் துவக்கம்
திசைகள் அதிர புறப்படட்டும் செம்படை
சிந்துவெளிக் குறியீடுகளுடன் சுத்தியல் அரிவாள்...!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்தியமாநாட்டை மக்களிடம் கொண்டும் செல்லும் வகையில், 600 சதுர அடியில் சிந்துவெளிக் குறியீடுகளைக் கொண்டு கட்சியின் சுத்தியல் அரிவாள் சின்னம் திருப்பூர் கேஆர்சி சிட்டி சென்டர் மைதானத்தில் தமுஎகச கலைஞர்கள் முன்னெடுப்பில் வரையப்பட்டுள்ளது. இதை வெள்ளியன்று தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.