world

img

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மர்,மார்ச்.29- மியன்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
மியான்மரில் மீண்டும் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் தற்போது 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 
நேற்று 6.4 மற்றும் 7.7 ரிக்டர் அளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து இன்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழப்புகள் பத்தாயிரத்தைத் தாண்டும் என USGS அமைப்பு கணித்துள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.