1972 - 9 ஆவது அகில இந்திய மாநாட்டுக் காட்சிகள்
1972 ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை - 8 நாட்கள் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 ஆவது அகில இந்திய மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் தலைவர்களும், பிரதிநிதிகளும்.
லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா உரையாற்றினார். அவரது உரையை என்.சங்கரய்யா மொழியாக்கம் செய்த காட்சி. (வலது) தியாகிகள் சுடரை வி.கார்மேகத்திடமிருந்து பி.சுந்தரய்யா பெற்றுக் கொண்டார். அருகில், கே.பி.ஜானகியம்மாள் உள்ளிட்டோர்.
பொதுக்கூட்டத்தில் பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியம், பி.டி.ரணதிவே ஆகிய தலைவர்கள் உரையாற்றிய காட்சிகள்.
பொதுக்கூட்டத்தில் பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி, ஜோதிபாசு, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகிய தலைவர்கள் உரையாற்றிய காட்சிகள். மேடையில், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், எம்.பசவபுன்னையா, என்.சங்கரய்யா, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், புரமோத் தாஸ்குப்தா உள்ளிட்ட தலைவர்கள்.
மதுரையின் நகரின் வீதிகளில், பிரம்மாண்ட செங்கொடி ஏந்தி அணிவகுத்த லட்சக்கணக்கான தோழர்கள்.