world

img

10 ஆண்டு மட்டுமே பிரதமர் பதவி: மலேசியாவில் சட்டத் திருத்தம்

10 ஆண்டு மட்டுமே பிரதமர் பதவி: மலேசியாவில் சட்டத் திருத்தம்

கோலாலம்பூர்,பிப்.24- மலேசியப் பிரதமரின் அதிகாரக் குவிப்பை தடுத்து, கட்டுப்படுத்தவும், பொறுப்புக்கூறலை அதிகரிக்க வும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்ற புதிய சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது.   அதாவது ஒருவர் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவியில்  இருக்க முடியும். தற்போது அந்நாட்டில்  பிரதமர் பதவிக்கு கால வரம்பு ஏதும் இல்லை. இதன் காரணமா கவே, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது 1981 -2003 வரையும், பின் 2018-2020 வரை என மொத்தம் 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.  தற்போதைய பிரதமர் அன்வர் இப்ராகிம், ஊழலை ஒழிக்கவும் நிர்வாகத்தைச் சீரமைக்கவும் கடந்த ஜனவரி மாதம் இந்த மாற்றத்தை அறிவித்தார். 2022 பொதுத்தேர்தலின் போது அவரது ‘பகத்தான் ஹரப்பான்’ (PH) கூட்டணி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். தனக்கே பொருந்தும்  இதுகுறித்து பேசிய அன்வர் ஒருவர் 10 ஆண்டுகள் (இரண்டு பதவிக்காலங்கள்) பதவியில் இருப்பது ஒரு திறமையான நிர்வாகத்திற்குப் போதுமானது என்றார். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், இது முதலில் தனக்கே பொருந்தும் என்றும் அவர் கடந்த வாரம்  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சீர்திருத்தங்கள் மெதுவாக நடப்பதாக எழுந்த விமர்சனங்களை  தொடர்ந்து, நகர்ப்புற வாக்காளர்களைக் கவரும் வகையிலான நகர்வாக  இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.