டிரம்ப்பின் வரிகளுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் கவின் நியூசோம் டிரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ள சிலிக்கான்வேலி, ஹாலிவுட் ஆகியவை உள்ள இம்மாகா ணம் உலகின் ஐந்தாவது பெரிய பொரு ளாதாரமாக உள்ளது. டிரம்ப் வரிகள் இந்நிறுவனங்களையும் பாதிக்கும். ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூசோம் 2028 இல் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் மிரட்டலை சட்டை செய்யாத சீனா
சீனா மீது 245 சதவீதம் வரை வரி விதிப்பேன் என அமெ ரிக்கா மிரட்டிய நிலையில், அச்சுறுத்தலை சீனா சாதாரணமாக கடந்துள்ளது. வரிகளின் எண்கள் விளை யாட்டை அமெரிக்கா தொடர்ந்தால் நாங் கள் அதில் கவனம் செலுத்த மாட்டோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்ச ரகம் தெரிவித்துள்ளது. டிரம்பின் வரிக ளுக்கு பதிலடியாக சீனா 125 சதவீதம் வரை வரி விதித்துள்ளது. தற்போது இந்த வர்த்தக போரை சமாளிக்க தனது சந்தைகளை விரிவுபடுத்துவதில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது.
ஆக்கிரமிப்பு திட்டத்தை அமலாக்கும் இஸ்ரேல்
காசாவில் பல பகுதிகளில் வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி படுகொலைகள் செய்துள் ளது. இந்த தாக்குதலில் 17 க்கும் அதிக மானோர் படுகொலையாகியுள்ளனர். மேலும் காசாவின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கும் வேலையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்காக அப்பகுதியை விட்டு வெளியேறாமல் முன்னேறி செல்கின்றது. காசாவில் இதுவை 51,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள் ளது. 1,16,343 பேர் படுகாயமடைந்துள்ளனர்.