world

img

டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்....

வாஷிங்டன்:
இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த  அண்ணல் டாக்டர்அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை   கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோகன்னா  தாக்கல்செய்துள்ளார்.இதுகுறித்து ரோகன்னா தனதுடிவிட்டர் பக்கத்தில், “உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்்கையில் பி.ஆர். அம்பேத்கரை கவுரவிக்கும் எனது தீர்மானத்தை மறுஅறிமுகம் செய்துள்ளேன். அம்பேத்கர்இந்தியாவிற்காகவும், அமெரிக்காவுக்காவும் நின்றார்”  என குறிப்பிட்டுள்ளார்.

அவரது தீர்மானத்தில், கடந்த  2010 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, “நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைப்பற்றி கவலையின்றி, ஒவ்வொரு நபரும் கடவுள் கொடுத்த திறனை நிறைவேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். டாக்டர் அம்பேத்கரைப் போன்ற ஒரு தலித் தன்னை உயர்த்திக்கொண்டு, அரசியல் சாசனத்தின் அம்சங்களை எழுதமுடியும். அது அனைத்து இந்தியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது” என கூறியதை தீர்மானத்தில் ரோகன்னா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ரோகன்னா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.