tamilnadu

காஷ்மீரில் மனித உரிமை மீறல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

வாஷிங்டன், டிச.8- காஷ்மீரில் மனித உரிமைக்கு பாது காப்பு இல்லை என்று கூறி இந்திய வம்சா வளியை சேர்ந்த பெண் எம்.பி.யான பிர மிளா ஜெயபால் அமெரிக்க நாடாளு மன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிர தேசங்களாக பிரித்து சிதைத்தது மத்திய பாஜக அரசு.  இதைத்தொடர்ந்து அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சில பிரிவினைவாத இயக்கத்தின் தலை வர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்ட னர். செல்போன், சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் முடக்கப் பட்டன. இந்திய அரசின் இந்த கட்டுப்பாடு களுக்கு கண்டனம் தெரிவித்து அமெ ரிக்காவில் வாழும் இந்தியர்கள் சங்கத் தின் சில பிரிவினர் கடந்த அக்டோபர் 26 அன்று சீயாட்டெல் நகரில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதற்கிடையில், அமெரிக்க நாடா ளுமன்றத்தின் பொதுச்சபைக்கு முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினரான இந்திய வம்சாவளி யை சேர்ந்த பெண் எம்.பி.யான பிர மிளா ஜெயபால், காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அங்கு தகவல் தொடர்பு களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பிரசார இயக்கத்தை முன்னெ டுத்து வந்தார்.இந்நிலையில் காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரமிளா ஜெயபால் அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மா னம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.