மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு
போராட்டம், கோரிக்கைகளை தெரிவிக்காமல் இருக்க பாஜக கூட்டணி அரசு அடாவடி
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச் சர்களாக ஏக்நாத் ஷிண்டேயும் (சிவ சேனா) அஜித் பவாரும் (தேசியவாத காங்கிரஸ்) உள்ளனர். இந்நிலையில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பொது நிர்வா கத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் என்ன வெளியிடலாம், என்ன வெளியிடக் கூடாது என புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில அரசு அல்லது நாட்டின் எந்த கொள்கைக ளையும் விமர்சிக்கக் கூடாது. மீறினால் 1979ஆம் ஆண்டின் மகாராஷ்டிர சிவில் சர்வீஸ் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். துறைக்குள் ஒருங்கி ணைப்புக்காக வாட்ஸ் அப், டெலி கிராம் போன்ற செய்தி தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கி யமாக ரகசிய ஆவணங்களை முன் அனுமதி இல்லாமல் பதிவேற்றவோ, பகிரவோ கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட எந்தவொரு பிளாட் பார்ம்கள் அல்லது செயலிகளையும் பயன்படுத்தக்கூடாது என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம், கோரிக்கையை தவிர்க்க... பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலைப்பளு, அரசின் அடாவடி முடி வுக்கு எதிராக அரசு ஊழியர்கள் விடுக்கும் கோரிக்கை மற்றும் போ ராட்டங்களை தவிர்க்கவே மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப் பாக தொழிற்சங்கங்களை ஒடுக்கவும் இந்த புதிய நடைமுறையை விதியாக அறி வித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.