பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு
இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் கனமழை
இமயமலைச்சாரலில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநி லத்தில் ஜூன் 20 முதல் ஜூலை 21 வரை மேகவெடிப்புடன் மற்றும் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இந்த கனமழையில் மண்டி மாவட்டம் உருக்குலைந்தது. மாநிலம் முழுவதும் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்நிலையில், கடந்த ஒரு வார மாக ஓய்வில் இருந்த கனமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. திங்க ளன்று இரவு 11 மணியளவில் தொ டங்கிய கனமழை, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் சிம்லா, மண்டி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங் கள் வெள்ளக்காடாய்க் காட்சி அளித் தன. 199 மிமீ அளவில் மழையை எதிர்கொண்ட மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயி ரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மையம் கொண்டு காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். இதன்மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 38 நாட்களில் கன மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது. மழை தொடர்பான பேரிடர்களில் 90 பேரும், சாலை விபத்துகளில் 74 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது. கனமழை தொடரும் இமாச்சலில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத னால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.