அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியதால் பெரும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் கடந்த 2 ஆம் தேதி உருவான ‘எல்சா’ புயல், படிப்படியாக வலுவடைந்து கடந்த 5 ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. இதனை தொடர்ந்து நேற்று தினம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டைலர் கவுண்டி பகுதியில் கரையை கடந்தது.
இதன் காரணமாக புளோரிடா மாகாணத்தில் பல இடங்களில் பெரும் மழை வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதத்தில் சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதை சீர்ப்படுத்த மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் எல்சா புயலின் வேகம் படிப்படியாக வலுவிழந்து மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஜார்ஜியா மாகாணத்தை கடந்து சென்றது.