world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கடும் பனிப்பொழிவு ; டென்மார்க்கில் முடக்கம்

டென்மார்க் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டன. தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரிய பயங்கரவாதத் தாக்குதல் : ஐநா பொதுச்செயலாளர் கண்டனம்

நைஜீரியாவின் க்வாரா மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகொலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டனத்தைத் தெரி வித்தார். பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடும் நைஜீரிய நாட்டு மக்களுக்கு ஐ.நா  அவை எப்போதும் துணை நிற்கும் என்றும்  குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவில் மனிதாபிமான நிலை மோசமடையும் : ஐ.நா எச்சரிக்கை  

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தி தடையின் காரணமாக அந்நாட்டில் மனிதாபிமான நிலை மோசமடையும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். கியூபா விற்கு எண்ணெய் கொண்டு வரும் நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலை யில், அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தடையின் காரணமாக அந்நாட்டில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பேருந்து விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு

 நேபாளத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில்  மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிக பாரம்  மற்றும் பேருந்தின் அழுத்தக் குழாய் வெடித்த தாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளியன்று உயிரிழந்தனர். எனவே  விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை  13 ஆக உயர்ந்துள்ளது.  விபத்தில் காயமடைந்துள்ள  40 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

திபெத், மியான்மரில் நிலநடுக்கம்

திபெத் மற்றும் மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் அதிகாலை  6.03 மணியளவில் 4.9  ரிக்டர் அளவிலும்  திபெத்தில் அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலும்  பதிவாகி உள்ளது. முன்னதாக மியான்மரில் பிப்ரவரி 2 அன்று  5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும், 3 ஆம் தேதி 5.3 ரிக்டர் அள விலான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இருபகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; ஆனால் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்”

ஹவானா,பிப்.6- கியூபா அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த  எப்போதும் தயாரா கவே உள்ளது. ஆனால் அவர்கள் அச்சுறுத்தல்களை முன்னெடுத்தால் அதற்கு  மத்தியில் பேச்சுவார்த்தை நடக்காது என அந்நாட்டு ஜனாதிபதி மிக்வெல் டயஸ்-கானெல் பெரு மிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கியூபா தோல்வியடைந்த நாடு அல்ல. உலகின் மிகப்பெரிய நாட்டின்  உச்சகட்ட அழுத்தத்தை மிகுந்த உறுதியுடன் எதிர்கொள்ளும் நாடு என்று பெரு மிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கியூப தலைமுறை யினர் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலேயே வளர்ந்தவர்கள், தற்போ தைய கடினமான மோசமான சூழலை “படைப்பாற்றல் மிக்க தடுப்பாற்றல்” (Creative Resistance) மூலம் வென்று காட்டுவோம் எனவும் அவர்  உறுதியளித்தார். வெனிசுலாவுடனான உறவு வெனிசுலாவுடனான உறவானது இரு நாடுகளுக்கு இடையிலான வெறும் பண்டமாற்று முறை மட்டுமல்ல இது ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் சகோதரத்துவம். கியூபா தனது மருத்துவச் சேவையை வழங்குகிறது, அதற்கு ஈடாக வெனி சுலா எரிபொருளை வழங்குகிறது. சமீப காலமாக கடல் வழியாக அமெரிக்கா செய்து வரும் முற்றுகையினால் இந்த எரிபொருள் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.வெனிசுலா அரசு ஒத்து ழைப்பை விரும்பும் வரை, கியூபா என்றும் தோள் கொடுக்கும் என்று அவர் தெரி வித்தார். கியூபா தனித்து விடப்படவில்லை அமெரிக்காவின் எரிசக்தி முற்றுகை க்குப் பிறகு, சர்வதேச அளவில் கியூபா விற்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன  ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஆகியோர் கியூபா விற்கு தங்களது முழு ஆதரவைத் தொலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி யுள்ளனர். “எதிரி கியூபாவிற்கான அனை த்து வழிகளையும் அடைக்கப் பார்க்கி றான். ஆனால் நான் பொறுப்புடன் கூறுகிறேன், கியூபா தனித்து விடப்பட வில்லை  பல நாடுகள் மற்றும் நிறுவனங் கள் எங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளன” என்றார். பலதரப்பு உறவுகளை பாதுகாக்க வேண்டும் உலகம் அமெரிக்காவின் ஒற்றை  ஆதிக்கத்திற்கு (Hegemony) அடிபணி யக்கூடாது. இது ஒரு சித்தாந்த மற்றும் கலாச்சாரப் போர். மக்கள் தங்கள் அடையாளத்தை மறந்து, அமெரிக்கா வின் கலாச்சாரத்தை ஏற்கும் வகையில் இந்தப் போர் நடத்தப்படுகிறது. பிரிக்ஸ், ஜி-77 மற்றும் அணிசேரா நாடுகள் போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் இந்த “பாசிச” நடவ டிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கு சில அடிப் படை கொள்கைகள் உள்ளன. அவர்கள் அச்சுறுத்தல்களை முன்னெடுத்தால் அதற்கு  மத்தியில் பேச்சுவார்த்தை நடக் காது. இரு நாடுகளும் சம அந்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கியூபாவின்  சுயாட்சி மதிக்கப்பட வேண் டும். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா  தலையிடக்கூடாது. கியூபா மக்கள் அமெரிக்க மக்களை வெறுப்பதில்லை. அவர்களது கலாச்சா ரத்தையும் வரலாற்றையும் மதிக்கிறோம். விஞ்ஞானம், விளையாட்டு, மதம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அமெரிக்காவின் “திமிர் பிடித்த மற்றும் குற்றவியல் கொள்கையான” தடைகளும் தாக்குதல்களும் அதனைத் தடுக்கிறது என்று கூறியுள்ளார்.