world

img

பெல்ஜியத்தில் விவசாயிகள் போராட்டம்

பெல்ஜியத்தில் விவசாயிகள் போராட்டம்

பிரஸ்ஸல்ஸ், டிச.18- பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நூற்றுக்க ணக்கான டிராக்டர்களுடன் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.  தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மாட்டி றைச்சி, சர்க்கரை, அரிசி, தேன் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களை ஐரோப்பா விற்குள் அதிக அளவில் இறக்குமதி செய்ய  “மெர்கோசூர்” என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் தென் அமெரிக்க நாடுகளின் பொருட்கள் ஐரோப்பாவிற்குள் அதிகளவு  இறக்குமதியாகும் குறிப்பாக மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல ஐரோப்பாவில் இருந்து வாகனங்கள், இயந்தி ரங்கள் மற்றும் மதுபானங்கள் தென் அமெரிக்கா விற்கு  ஏற்றுமதி செய்யப்படும். இதன் காரணமாக ஐரோப்பிய விவசாயிக ளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும். ஐரோப்பாவில் உள்ள உள்நாட்டு விவசாயிகள், இறைச்சிக்காக கால் நடைகளை வளர்க்கும் பண்ணை சார்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் நெருக்க டியை சந்திக்கும் என விவசாயிகள் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அது மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் விவசா யிகளுக்கு வழங்கும் மானியத்தை 20 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதிகளவி லான உணவுப் பொருட்களின் இறக்குமதியையும் அனுமதித்துவிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வந்த மானியத்தையும் குறைப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத நடவடிக்கை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை நோக்கி  தள்ளப்படும் என  விவசாயி கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தை இந்த வார இறுதிக்குள் முடிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தரநிலைகள் இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கோரியுள்ளன. இதனால் இவ்வொப்பந்தம் கையெழுத்தாவது தற்காலிகமாகத் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.