world

img

ஜெர்மனி தேர்தலில் தீவிர வலதுசாரிகள் வெற்றி ; இடதுசாரிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்

ஜெர்மனி தேர்தலில் தீவிர வலதுசாரிகள் வெற்றி ; இடதுசாரிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்

ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தலில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாய கக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவரான ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் அடுத்த அதிபராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலை மையில் அக்கட்சியை சேர்ந்த ஓலாஃப் ஸ்கோல்ஸ் அதிபராக கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். உக் ரைன் போருக்கு கொடுத்து வந்த தொடர் ஆயுத உதவியின்  காரணமாக ஜெர்மனியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதற்கான செல வினங்கள் குறைப்பு நடவடிக்கையால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கூட்டணி உடைந்தது. ஸ்கோல்ஸ் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெ டுப்பிலும் அவர் தோல்வியடைந்தார்.  இதனை தொடர்ந்து நடைபெற்ற அந்நாட்டு பொது தேர்தலில் பிற்போக்குவாதிகளான கன்சர் வேடிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி (CDU), அதன் கூட்டணிக்கட்சியான  கிறிஸ்தவ சமூக ஒன்றிய (CSU) கட்சியுடன் இணைந்து 28.6 சதவீத வாக்குகளும் 208 நாடாளுமன்ற தொகுதி களில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தது.

அதே நேரத்தில் தீவிர வலதுசாரி கட்சியான, குடியேற்ற எதிர்ப்பு ஜெர்மனிக்கான  மாற்று (AfD) கட்சி 20.8 சதவீத வாக்குகள் பெற்று 152 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று இரண்டா வது இடத்தைப் பிடித்துள்ளது.   முன்னாள் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வெறும் 16.4 சதவீத வாக்குகள் மட்டும் பெற்று 120 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இக்கட்சி 2021 தேர்தலில் முதல் இடத்தைப் பிடித்தது. அந்த முடிவுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது அக்கட்சி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 இடதுசாரி கட்சி என்ற தோற்றத்தில் இயங்கி வரும் பசுமைக் கட்சி (Green Party) 11.6 சதவீத வாக்குகளை பெற்றதுடன் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுள்ளது. இது  கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியில் இருந்து மோசமான பின்னடைவை சந்திக்கவில்லை.   அதேபோல  2007 இல் துவங்கப்பட்ட இடது சாரிக்  கட்சியான டை லிங்கே (Die Linke) 9 சதவீத வாக்குகளையும் 64 நாடாளுமன்ற தொகுதிகளை யும் வென்றுள்ளது. இக்கட்சி கடந்த தேர்தலை விட முன்னேறியுள்ளதாகவும் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது