1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமெரிக்கா
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே உள்ள இத்துறையை சேர்ந்த ஊழி யர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பணி நீக்கம் தொடர்பாக ஊழியர் ளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ஏப்ரல் 24 முதல் அரசு வேலையில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
போப் பிரான்சிஸ் உடல்நிலைதொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்ப தாக வாடிகன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வாடி கன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “போப் பிரான்சிஸ்க்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. அவருக்கு ஆரம்பகட்ட சிறுநீரகப் பிரச்சனை இருப்பதும் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை தொடரும் - ஹிஸ்புல்லா
“மக்களின் சுதந்திரமான வாழ்க்கை, விடுதலைக்கான உரிமை, இதை எவராலும் எங்களிடமிருந்து பறிக்க முடியாது” என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசிம் அறிவித்துள்ளார். இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் சையத் ஹஷேம் ஆகியோரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கிடையே பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிக்கிறது - குட்டரெஸ்மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிக்கிறது - குட்டரெஸ்
தேடுதல் வேட்டை என்ற பெயரில்ஆக்கிர மிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் வன்முறைகளையும் படுகொலை களையும் நடத்தி வருகின்றது.இத்தகைய மனித உரிமை மீறல்கள் குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் மக்களால் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் உரிமைமீறல்கள் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
சீன - ரஷ்ய ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேச்சு
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவில் போர் தொடுத்து மூன்றாம் ஆண்டுகள் நிறைவடை யும் நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரை யாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் உறவுகளை மீட்டுருவாக்குவது குறித்தும், உக்ரை னுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவ தற்கான சமாதான உடன்படிக்கைக்கான வாய்ப்பு கள் குறித்தும் ஜனவரி மாதம் புடின் மற்றும் ஜி ஜின்பிங் கலந்துரையாடிய நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.