ஈரானில் பொருளாதார நெருக்கடி- மக்கள் போராட்டம் : 7 பேர் பலி
டெஹரான்,ஜன.2- ஈரான் அரசின் மோசமான நிர்வா கத்திற்கு எதிரான போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு காரணமாக ஈரானில் மக்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அந் நாட்டு மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2025 டிசம்பர் மாதக் கணக்கின்படி, அந்நாட்டின் விலைவாசி உயர்வு 42.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அத்தி யாவசியப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சாதாரண உழைக்கும் மக்கள் தங்க ளின் அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ வழியில்லாமல் தவித்து வருகின்றனர். சிறு குறு தொழில்கள், வியாபாரங் கள் முடங்கி விட்டன. இதனால் கடும் கோபமடைந்த வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழ கங்களைச் சேர்ந்த மாணவர்களும் மக்களின் போராட்டத்தில் இணைந்துள் ளனர். இந்தப் போராட்டங்களில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பல கட்ட டங்கள் கடுமையாக சேதமடைந்துள் ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் நாணயமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சுமார் 14 லட்சம் ரியால்களாக உள்ளது. இத னைத் தொடர்ந்து திங்களன்று (2025 டிச. 29) அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் அமைச்சரவை புதன் கிழமை அப்துல்நாசர் ஹெம்மதியை மத்திய வங்கியின் ஆளுநராக நிய மித்துள்ளது. தலைநகர் தெஹ்ரானில் தொ டங்கிய இந்தப் போராட்டம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. போலீ சார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். ஜனாதிபதி பெசஷ்கியன், ஒரு பேட்டி யில் பொருளாதார நெருக்கடியை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்துள் ளார். அதாவது “மக்களின் வாழ்வாதா ரச் சிக்கல்களைத் தீர்க்காவிட்டால் நாம் நரகத்திற்குத்தான் செல்ல நேரிடும்” என்று கூறியுள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்க ளுக்கு உரிமை உண்டு என்றும், ஆனால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
