world

img

முதலாளிகளுக்கு கோடிகள்; எங்களுக்கு வறுமையா?

நியூயார்க், ஜூலை 17- கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹாலிவுட்டில் பெரும் அளவில் ஊதியப் பிரச்சனை  எழுந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள திரைப் பட எழுத்தாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். போதிய அளவு ஊதி யம் வராத நிலையில், விலைவாசி யும் எகிறியுள்ளதால் தங்களின் ஊதி யத்தைக் காலத்திற்கு ஏற்றவாறு அதி கரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். தங்கள் பிரச்ச னைகளுக்கு செவி மடுக்காத நிலை யில் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். எழுத்தாளர்கள் போராட்டம் நடந்தாலும் இரண்டு மாதங்களாகப் படப்பிடிப்புகள் நடந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்புகள் பாதிக் கப்படாததால், நிறுவனங்களின் முத லாளிகளும், தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களின் எதிர்ப்பு பற்றிக்  கவலைப்படவில்லை. அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவும் இல்லை. சிறிய அளவு பணம் போட்டுப் படம் எடுப்பவர்கள் கூட  இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திரைப்பட நடி கர்கள் மற்றும் தொலைக்காட்சி-வானொலிக் கலைஞர்கள் சங்கம்  போராட்டக் களத்தில் இறங்கியிருக் கிறது. எழுத்தாளர்களோடு கைகோர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பிரபலமான பல நடிகர்,  நடிகைகளும் தங்கள் ஒற்றுமை யைக் காட்டும் வகையில்  அந்த  ஆர்ப்பாட்டங்களில்பங்கேற்கிறார்கள்.  நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் 65 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

போராட்டத்தில் இறங்குவது குறித்து  பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சங்கத்தின் தலைவரும், பிரபலமான தொலைக்காட்சித் தொடரான தி நான்னியின் நாயகியுமான ஃபிரான் டிரஸ்லெர், திரைப்பட எழுத்தாளர் களோடு கைகோர்த்து ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றார். போராட்டத்தை வாழ்த்தியும் பேசினார்.  இரண்டு சங்கங்களும் ஒரே மாதிரியான கோரிக்கைகளையே முன்வைத்துள்ளன. விலைவாசி உயர்வு மற்றும் குறைவான ஊதியம் ஆகியவற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றுபட்ட போராட்டத்திற்கான திட்டமிடல் நடக்கிறது. கலைஞர்களைப் பொறுத்தவரையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர் களின் வேலைகளைச் செய்வது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.  தங்கள் போராட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்த டிரஸ்லெர், “எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பெரும் பேராசை பிடித்தவர்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. எங்களை  நடத்தும் முறை அதிர்ச்சியளிக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. கலைஞர்களை வறுமையைக் காட்டி அரற்றுகிறார்கள். முதலாளிகள் கோடிக்கணக்கான டாலர்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். 1960 ஆம் ஆண்டில் இவ்வளவு பெரிய கலைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பிந்தைய நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி யாக பணியாற்றிய ரொனால்டு ரீகன் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.