districts

திருச்சி முக்கிய செய்திகள்

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

அறந்தாங்கி,  டிச.20 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மையத் துக்கு உட்பட்ட நரிக்குற வர் காலனி தொடக்கப்  பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பார்வையிட்டார். பள்ளி யில் இடைநின்ற மாண வர்களை மீண்டும் பள்ளி யில் சேர்க்க அந்த கிராமத்  தலைவருடன் கலந்தா லோசித்தார். மேலும் பத்தாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களை கீரனூர் தொழிற்பயிற்சி மையத் தில் சேர்க்க ஆலோசனை வழங்கினார். இதில், புள்ளியியல் ஆய்வாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் (பொ), ஆசிரியர் பயிற்று நர்கள், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உட னிருந்தனர்.

எழுதப் படிக்க  தெரியாதவர்களுக்கு  விழிப்புணர்வு

அறந்தாங்கி,  டிச.20 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மையத் துக்கு உட்பட்ட கூத்தாடி வயல் கிராமத்தில் ஊரக  வேலைவாய்ப்பு பணியா ளர்களிடையே புதுக் கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர், எழுதப் படிக்க தெரியா தவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். மேலும் பத்தாம் வகுப்பு  முடித்து உயர்கல்வி பயி லாத மாணவர்கள் இருப்பின் அவர்களுக் கான உயர்கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். கூத்தாடி வயல் கிராமத்தில் 12 பெண்கள் முழுவதும் எழுதப் படிக்கத் தெரியா தவர்களாக உள்ள விபரம் அறியப்பட்டது. 

ஓய்வூதியர் தின விழா 

திருத்துறைப்பூண்டி, டிச.20 - தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம்  திருவாரூர் மாவட்டம்  சார்பில் திருத்துறைப் பூண்டியில் ஓய்வூதியர்  தின விழா கொண்டாடப் பட்டது. வட்டாட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் இயக்க கொடியினை ஓய்வு பெற்ற உதவி  தொடக்கக் கல்வி அலு வலர் வி.மாணிக்கவேல் ஏற்றினார். தமிழ்ச்செல் வன் தலைமை வகித் தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வி.ரா ஜேந்திரன் வரவேற்றார். ஓய்வூதியர்களுக்கு துண்டு அணிவித்து நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர்  நடந்த அரசியல் அறி வோம் கருத்தரங்கில் ஓய்வூதியர்கள் கருத்து ரையாற்றினர். மாநில துணைத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். அமைப்புக் குழு முருகா னந்தம் நன்றி கூறினார்.

பேருந்து நிறுத்த நிழற்குடை இடிப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.20 - திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் நொச்சியம் - மண்ணச்சநல்லூர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக பொதுமக்கள் பேருந்து நிறுத்த நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிழற்குடையை இரவோடு, இரவாக சில சமூக விரோதிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாதவப் பெருமாள் கோவில் பஞ்சாயத்து நிர்வாகம், காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதைக் கண்டித்தும், பேருந்து நிறுத்த நிழற்குடையை இடித்த சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும். மீண்டும் அந்த இடத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக் குழு சார்பில் வெள்ளியன்று நொச்சியம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் பூமாலை, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் பேசினர்.

எடையூர் வேளாண் விரிவாக்க மைய  கட்டடப் பணிகளை ஆய்வு செய்ய கோரிக்கை

முத்துப்பேட்டை, டிச.20- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே எடையூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பழுத டைந்த வேளாண் விரிவாக்க  மையத்தை இடித்து அகற்றி  புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த வேளாண்மை மையத்தை சங்கேந்தி, அம்ம லூர், பாண்டி குன்னலூர், வெள்ளாங்கால், வட சங்கேந்தி, ஆரியலூர், ஓவரூர் உட்பட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு கிராம விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். விவசாயிகள் மானியம் பெறுவதற்கும், பயிர் காப்பீடு வெள்ள நிவா ரணம், வறட்சி நிவாரணம் மற்றும் இயற்கை இடர்ப்பா டுகள் ஏற்படும் போதெல் லாம் விவசாயிகள் நாடுவது  இந்த வேளாண் மையத்தை தான். இம்மையம் 1970  ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  மையத்தை “காந்தி டெப்போ”  என விவசாயிகள் அழைத்த னர். விஷப்பூச்சிகள் கிடங்கிற்கு உள்ளே சென்று விடுவதால் பணிபுரியும் ஊழியர்கள் பயத்துடன் வேலை செய்து வந்தனர்.  இந்நிலையில், ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டப்பட்டு வரு கிறது. கட்டப்பட்டு வரும் புதிய வேளாண்மை கட்ட டத்தின் பின்புறத்தில் குளம்  அளவிற்கு மணல் எடுத்து,  கட்டடத்தில் உள்ளே நிரப்பி  உள்ளனர். இதனால் பின்புறத்தில் குளம் போன்று காட்சி அளிக்கிறது.  தற்போது பணி முடியும்  தருவாயில் உள்ளதால், கட்டடத்தின் பின்புறத்தில் மணல் கொண்டு நிரப்பப்ப டாமல் விட்டுவிட்டால், சில வருடங்களுக்குப் பிறகு புதிய கட்டடம் பள்ளத்தில் சரிந்து விழ வாய்ப்புகள் அதிகம். எனவே அதிகாரி கள் விரைந்து கட்டடப் பணியை ஆய்வு செய்து, பின் புறத்திலும் மண் கொண்டு நிரப்பி சரி செய்ய  வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர். 

நில அளவையர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கரூர், டிச.20 - தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களப் பணியாளர்கள் செய்யும் அனைத்து விதப் பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள் ளவும், மனிதத் திறனுக்கு ஏற்ற குறி யீடுகளை வரையறுக்கவும் வேண்டும்.  உதவி இயக்குநர் கூடுதல் இயக்குந ரின் பணிகளையும், கடமைகளையும் மண்டல துணை இயக்குநர், இணை இயக்குநர் (நிர்வாகம்) ஆகியோரை மாற்றும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.மகேந்திரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் ஏ.குணசுந்தரி முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லர் வெ. தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

முதலீடு மோசடி:  புகார் செய்ய பொருளாதாரக் குற்றப் பிரிவு அழைப்பு

தஞ்சாவூர், டிச.20 -  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்ற மடைந்தவர்கள் புகார் செய்ய பொருளாதாரக் குற்றப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி தெரிவிக்கையில், “பாபநாசம்  வட்டத்துக்குட்பட்ட அய்யம்பேட்டையைத் தலைமையிட மாகக் கொண்டு இயங்கி வந்த ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறு வனம் மற்றும் வழுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய மர்ஜிக் கேப்ஸ் அன்ட் டிரான்ஸ்போர்ட் நிறு வனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதில் வரும் லாபத் தொகையில் பங்கு தருவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்றனர். ஆனால், லாபத் தொகையில் பங்கு தராமலும், பெறப்பட்ட  தொகையைத் திருப்பித் தராமலும் மோசடி செய்து ஏமாற்றியதாக இரு நிறுவனங்கள் மீது புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறு வனம் மற்றும் மர்ஜிக் கேப்ஸ் அண்டு டிரான்ஸ்போர்ட் நிறுவனத் தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் யாரேனும் முதலீடு செய்து, ஏமாற்றமடைந்திருந்தால் தஞ்சா வூர் மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் முதல் தெரு விலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி  புகார் கொடுக்கலாம்” என்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  சித்த மருத்துவ முகாம்

தஞ்சாவூர், டிச.20 -  தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறை சார்பாக சித்த மருத்துவத்தின் தந்தை என்று அனைவராலும் போற்றப்படும் அகத்திய மாமுனிவர் பிறந்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திரமான டிச.19 அன்று 8-ஆவது சித்தர் திருநாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சி தமிழ்ப் பல்கலைக்கழக மூலிகைப் பண்ணை சித்த மருத்துவப் புறநோயாளர் பிரிவில்  நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக சித்த மருத்துவத்துறை உதவிப் பேராசிரியர் மருத்துவர் பழ.பாலசுப்ரமணியன் வர வேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) பேராசி ரியர் முனைவர் சி.தியாகராசன் இலவச சித்த மருத்துவ  முகாமைத் துவக்கி வைத்து, சித்த மருத்துவத்தின் சிறப்பு களை எடுத்துக் கூறினார்.  மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் சித்த மருத்துவத் துறைத்தலை வர் மற்றும் அறிவியல் புல முதன்மையர் மருத்துவர் முனைவர் பெ.பாரதஜோதி, சித்தர் நாள் விழாவின் நோக்கத் தையும் மூலிகைகளின் பயன்களையும் எடுத்துக் கூறினார். மூலிகைக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட  மருத்துவத் தாவரங்கள் இடம் பெற்றிருந்தன. சித்த மருத்து வத் துறை உதவிப் பேராசிரியர் மருத்துவர் து.மாண்டெலா நன்றி கூறினார். 

ராமானுஜர் 137 ஆவது பிறந்தநாள்  கும்பகோணர் அரசுக் கல்லூரியில் தேசிய கணித விழா

கும்பகோணம், டிச.20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்  கல்லூரி (தன்னாட்சி)யில் கணிதத்துறை சார்பாக கணித மேதை சீனிவாச இராமானுஜரின் 137 ஆவது பிறந்த நாளான தேசிய கணித நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவில் கணிதத்துறைத் தலைவர் அ.எட்வர்டு சாமுவேல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அ. மாதவி தலைமையுரையும், வேதியியல் துறைத் தலைவர் மா.மீனாட்சிசுந்தரம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுந்தரராஜன் மற்றும் இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவர்  சீ.தங்கராசு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார். ஜெயங்கொண்டம் அரசினர் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி முதல்வர் க.ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்திய கணிதவியலாளர்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பல்வேறு கணிதப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் முதல்வர் பரிசளித்து பாராட்டினர்.  விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.20 - 11 ஆண்டுகளாக உயர்த்தாமல் உள்ள மீட்டர் கட்ட ணத்தை உயர்த்த வேண்டும். டூவீலர் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில்  வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்கத் தலைவர் சார்லஸ், மாநகர் மாவட்டச் செய லாளர் மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் சிவாஜி,  பொருளாளர்கள் பழனியப்பன், சந்திரசேகர் ஆகியோர் பேசினர்.