districts

img

பொதுத் துறையை பாதுகாக்க வேண்டும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தர்ணா

திருச்சிராப்பள்ளி, டிச.20 - பொதுத் துறையை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழி யர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று மாலை  திருச்சி புறநகர் கிளை முன்பு தர்ணா நடை பெற்றது.  வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே  பேசி முடிக்க வேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு 110 மாத அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு காலப் பணப்பலன் களை வழங்க வேண்டும். வாரிசு வேலை உடனே வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். வேலைக்கு  ஆட்களை முறை யாக நியமனம் செய்ய  வேண்டும். தனியார் மயக் கொள்கையை கை விட வேண்டும் என  தர்ணாவில் வலியுறுத்தப் பட்டது. திருச்சி, கரூர், நாகை, கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக் குடி மண்டலங்களை சேர்ந்தச் சிஐடியு, தொ ழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வு பெற்றோர் தர்ணா வில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் கருணா நிதி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க வுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி  சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனி வாசன், கும்பகோணம் மண்டல பொதுச் செய லாளர் மணிமாறன், நாகை மண்டல பொதுச்  செயலாளர் ராஜேந்திரன், காரைக்குடி மண்டல பொதுச் செயலாளர் தெய்வவீர பாண்டியன், புதுகை மண்டல பொதுச் செய லாளர் மணிமாறன், அரசு விரைவு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் அருள்தாஸ், காரைக்குடி  வெங்கடேசன், புதுகை லோகநாதன் ஆகி யோர் பேசினர். பொருளாளர் சிங்கராயர் நன்றி கூறினார்.