world

img

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சுமார் 85.08 என்ற அளவில் சரிந் துள்ளது. 2024 துவக்கத்தில் இருந்து இதுவரை இந்திய ரூபாய் 2.2 சதவீதம் வரை சரிந்துள்ளது. தற்போதைய ரூபாய் சரிவுக்கு அமெரிக்க பெடரல் ( ரிசர்வ்) வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததே காரணம்.   இவ்வாறு தொடர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் இறக்குமதி செய்வோர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். சமீப ஆண்டுகளாக மோடி அரசாங்கம் அதிகளவிலான இறக்குமதியை செய்து வருகிறது. இது இந்திய அரசின் அந்நியச் செலாவணி இருப்பு அதிகளவிற்கு குறைய வழிவகுத்து அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மக்கள் தலை யில் தள்ளும். அதேபோல இந்தியப்  பங்குச்சந்தைகள், டிச.19 அன்று வரை தொடர்ந்து மூன்று நாளாக  சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.