அதிக வரி வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளது
உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஸ்ட்டி தெரிவித்துள்ளார். இத்தகைய வரிகளை குறைப்ப தற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் நமக் கிடையே வர்த்தகத்தை அதிகரிக்க நியாய மான மற்றும் சமமான வாய்ப்புகளை உருவா க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தி யப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்பேன் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்த பின் இவ்வாறு எரிக் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப இங்கிலாந்து திட்டம்
2022 முதல் இங்கிலாந்து ராணுவ மருத்து வர்கள் உக்ரைன் ராணுவத்துக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி என்ற பெயரில் இங்கி லாந்து வீரர்களை போர்ப் பகுதிகளுக்கு அனுப்ப இங்கிலா ந்து பாதுகாப்புத் துறை செயலர் ஜான் ஹீலே ஆலோசனை வழங்கியுள்ளார். உக்ரைன் போரை நிறுத்தாமல் தொடர்வதற்காக நேட்டோ பொதுச்செயலர் வீட்டில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நடத்திய ரகசிய சந்திப்பிற்கு பிறகு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் ரத்தம் கலந்த கனிமங்களை கொள்ளையடித்த ‘ஆப்பிள்’
காங்கோவில் கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்க ளை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதனை குறிப்பிட்டு அந்நாட்டு வழக்கறிஞர்கள், பிரா ன்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனங் கள் மீது கிரிமினல் வழ க்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த கொள்ளையடிக்கப் பட்ட கனிமங்கள் சர்வ தேச விநியோகச் சங்கி லிகள் மூலமாக நியாயமான முறை யில் எடுக்கப்பட்ட கனிமங்களாக மாற்றப்படுகின்றது. இது நுகர்வோரை ஏமாற்றும் செயல். அந்த தாதுக்களில் காங்கோ தொழிலாளர்களின் ரத்தம் நிறைந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
இனப்படுகொலையை தடுக்க முடியாதது ஐ.நா. உறுப்பினர்களுக்கு அவமானம்
காசாவில் இஸ்ரேல் நடத்தி வருகிற இனப்படுகொலை யை ஐ.நா.வில் உள்ள 192 உறுப்பு நாடுகளால் தடுக்க முடியவில்லை. இது மிகப்பெரிய அவமானம் என ஐநாவின் பாலஸ் தீன மனித உரிமைக ளுக்கான ஐ.நா., சிறப்பு அறிக்கையா ளரான பிரான் செஸ்கா அல்பானீஸ் இயலாமையை கோப மாக வெளிக்காட்டி யுள்ளார். காசாவில் கிட்டத்தட்ட எல்லாமே அழிந்து விட்டது. தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் மக்களின் விரக்தியைத் தவிர வேறு எதுவுமே காசாவில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் மீண்டும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இம்முறை தொழிலாளர்களின் உற்பத்தியை கண்காணிக்கும் தலைமைப் பொறுப் பில் உள்ள (Direc tors,Vice presid ents) தொழிலா ளர்களில் 10 சதவீத மானவர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தொழிலாளர்களின் இடத்தை ஈடுகட்டிக்கொள்ளலாம் என கூகுள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.