districts

img

ஊருக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

பெரம்பலூர், டிச.20 - பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிராமத்தில் ஊருக்குள் புகுந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம் பினை பொதுமக்கள் பிடித்தனர். பெரம்பலூர் அருகே பச்சைமலைத் தொடர் அடி வாரத்தில் உள்ளது களரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில்  வெள்ளிக்கிழமை அக்கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவர்  கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டின் அருகே  ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் திரண்டு வந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து பெரம்ப லூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையின ரிடம், மீட்ட மலைப்பாம்பை பொதுமக்கள் ஒப்படைத்தனர். வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை லாடபுரம் மயி லூற்று அருவி வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்ட மலைப் பாம்பு சுமார் 12 அடி இருக்கும் என கூறப்படுகிறது.