ஆப்பிரிக்க நாடுகளுக்கு இறக்குமதி வரி ரத்து -சீனா
மே 1 முதல் எஸ்வாட்டினி நாட்டை தவிர அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இறக்குமதி வரிகளை ரத்து செய்யும் சீனாவின் திட்டம் அமலுக்கு வரும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனா ஏற்கெனவே 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பூஜ்ஜிய வரி (Zero-tariff) கொள்கையை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தச் சலுகையை ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தனது 53 தூதரக நட்பு நாடுக ளுக்கும் விரிவாக்கம் செய்யப்போவதாக பெய்ஜிங் அறிவித்திருந்தது.
குண்டு வெடிப்பு, வன்முறை : வங்கதேசத்தில் 3 பேர் பலி
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை களில் வங்கதேசத்தில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. “காக்டெய்ல்” என அழைக்கப்படும் வெடிகுண்டுகளை வீட்டில் தயா ரித்துக் கொண்டிருந்தபோது சனிக்கிழமை அதி காலையில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் பலி யாகினர். அதற்கு முந்தைய நாளான வெள்ளிக் கிழமை தேர்தல் முடிவில் வங்கதேச தேசியவாத கட்சி (BNP) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி யின் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.
ஐ.நா மீது குற்றம் சுமத்தும் அமெரிக்க வெளியுறவுத்துறை
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஐ.நா அவை உலகளா விய மோதல்களைத் தீர்ப்பதில் தோல்வியடைந்து விட்டது; எனவே சர்வதேச அமைப்புகள் மறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என கூறி யுள்ளார். ஐ.நா அவையை முடக்க முயற்சிப்பது டன் சர்வதேசச் சட்டங்களையும் ஐ.நா விதிமுறைக ளையும் தொடர்ந்து மீறும் நாடாக அமெரிக்காவே உள்ளது. மேலும் அவ்வமைப்புக்கு மாற்றாக புதிய அமைப்பை அமெரிக்கா துவங்கியுள்ள நிலையில் ஐ.நா.வுக்கு எதிரான நடவடிக்கை களையும் தீவிரப்படுத்தி வருவது குறிப்பி டத்தக்கது.
அரசியல் கைதிகள் வெனிசுலாவில் விடுதலை
வெனிசுலாவில் 17 அரசியல் கைதிகள் விடு விக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் இது குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டபோது, “பொதுமன்னிப்புச் சட்டத்தின் கீழ், 17 பேர் தற்போது விடுவிக்கப் பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட வர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை. பொது மன்னிப்பு சட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், பிப்ரவரி 12 நடைபெறவிருந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்த அடுத்தகட்ட விவாதம் வரும் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சிறைக்கு மாற்றப்படும் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சிறைக்கு 2 மாதம் கழித்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மாற்றப்படுவார் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு கண்பார்வை பெருமளவில் குறைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு திட்டமிடப்பட்ட, மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோதமான சிகிச்சை அளிக்கப் படுவதாகவும் அவரது உதவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சூழலில் தான் சிறை மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காசா மீதான தடையை தகர்க்க மீண்டும் பிரம்மாண்ட பயணம் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை அறிவிப்பு
கேப்டவுன்,பிப்.14- காசா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத தடைகளையும் முற்றுகையையும் உடைக்க இந்த ஆண்டு மிகப்பெரிய குழுவுடன் நிவார ணப் பொருட்களை கொண்டு செல்ல உள்ள தாக நெல்சன் மண்டேலா அறக்கட்டளை அறிவித்துள்ளது. காசா மீதான போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து அங்கு குண்டு வீசி பாலஸ்தீனர்களை படுகொலை செய்து வருகிறது. மேலும் காசா பகுதிக்குள் இஸ்ரேலால் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டுள்ள பஞ்சம், நோய் தொற்று ஆகியவற்றின் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனை சமாளிக்க தேவையான போது மான அளவு உணவு, குடிநீர், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை காசாவிற்கு கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமான கட்டத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ‘குளோ பல் புளோட்டிலா சுமுத்’ (Global Flotilla Sumud) அமைப்பு இந்த ஆண்டு வழக் கத்தை விட மிகப்பெரிய அளவிலான பங்கேற்பாளர்களுடன் தரை மற்றும் கடல்வழி யாக நிவாரணப்பொருட்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டே லா அறக்கட்டளை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரும் 2026 மார்ச் 29 அன்று ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலிருந்து இந்தக் கப்பல் குழு புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய குழு இது குறித்து ஒருங்கிணைப்பாளர் சுமேரா அக்தெனிஸ் ஓர்டு கூறுகையில், “இம்முறை 100-க்கும் மேற்பட்ட படகுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் நாங்கள் பயணிக்க உள்ளோம் என்றார். மேலும் இந்தப் பயணத்தில் அனைத்து நாடுக ளிலிருந்தும் மக்கள் இணைய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். இந்த 2026 பயணத்திட்டத்தில் மருத்துவக் குழுவினர் மட்டுமின்றி, சூழலியல்சார் கட்டு மான நிபுணர்கள் (Eco-builders), போர்க் குற்றங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க ளும் பங்கேற்க உள்ளனர். இது இந்த ஆண்டு குழுவின் தனிச்சிறப்பு எனவும் குறிப்பிட்டார். மண்டேலாவின் பேரன் ஆதரவு தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பேரன் மாண்ட்லா மண்டேலா இந்தச் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். “தென்ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள் இன்று அனுபவிக்கும் சுதந்திரம், அன்று உலகம் முழுவதும் எங்களுக்காகக் குரல் கொடுத்த எளிய மனிதர்களால் கிடைத்தது. அன்று எப்படி உலக நாடுகள் இணைந்து இன வெறி தென்ஆப்பிரிக்காவை தனிமைப் படுத்தினோமோ, அதேபோல் இன்று இஸ் ரேலை நாம் தனிமைப்படுத்த வேண்டும்.” மேலும், பாலஸ்தீனப் பிரச்சனை என்பது ஏதோ ஒரு மதப் பிரச்சனை அல்ல, அது ஒட்டு மொத்த மனிதநேயம் சார்ந்த பிரச்சனை என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார். காசா மீதான முற்றுகையை உடைக்க கடந்த காலங்களிலும் குளோபல் புளோட்டிலா சுமுத் கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. பலமுறை சர்வதேசக் கடல் எல்லையிலேயே இஸ்ரேல் ராணுவம் அக்கப்பல்களை தடுத்து நிறுத்தியதுடன் அதில் இருந்த மாண்ட்லா மண்டேலா உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்க ளை கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
